கோவை வாழ் மக்களை மகிழ்விக்க வருகிறது "ஜங்கில் வேர்ல்டு பொருட்காட்சி"!!

பிரம்மாண்ட பசுமை வன முகப்பு நீர்வீழ்ச்சியுடன் கூடிய அரங்கத்துடன் டிசம்பர் 21 ஆம் தேதி துவக்கம்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்ற கடல்மீன் கண்காட்சியை தொடர்ந்து  மனாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்த பொருட்காட்சியை கோவை வ.ஊ.சி.மைதானத்தில்  டிசம்பர் 21 ஆம் தேதி துவங்க உள்ளது.

ஜங்கிள் வேர்ல்டு எனும் பெயரில் பிரம்மாண்டமான  பசுமை மலை நீர்வீழ்ச்சி  போன்ற முகப்பில் வன விலங்குகள் அமர்ந்துள்ளதை போல தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்..

இது குறித்து மனாஸ் எண்டர்டெயின்மெண்ட் பங்கு தாரர்கள் முகம்மது இஸ்மாயில்  அபுதாகீர், ஜியா, பாண்டியன், ஹபீஸ் அகமது  ஆகியோர் பேசுகையில்,

கோவை வ உ சி மைதானத்தில் முதல் முறையாக மனாஸ்  என்டர்டைன்மென்ட் சார்பாக ஜங்கில் வேர்ல்டு  (JUNGLE WORLD) பொருட்காட்சி வருகின்ற டிசம்பர் 21 ந்தேதி  முதல்    ஜனவரி 19 ந்தேதி  வரை நடைபெற இருக்கின்றது. 

நீர்வீழ்ச்சி நுழைவாயிலுடன் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சி பெரியவர் முதல் சிறியவர்கள் விளையாடி மகிழ்ந்திட வித விதமான ராட்டினங்கள்  ஸ்னோ வேர்ல்டு  3D திகிலூட்டும் பேய் வீடு சுவைத்து மகிழ டெல்லி அப்பளம்,  பானி பூரி, ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ், மதுரை ஜிகர்தண்டா போன்ற இருபதுக்கும் மேற்பட்ட  உணவு வகைகள் 50 க்கும் மேற்பட்ட வர்த்தக அரங்குகள் சுட்டிக் குழந்தைகளுக்கு  பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும்  நிறைந்த்தாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மாலை 4 மணி முதல் இரவு பத்து மணி வரை நடைபெற உள்ள இந்த பொருட்காட்சி அரசு விதமுறைகள் அனைத்தையும் பின்பற்றி நடைபெறுவதாகவும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு நல்ல இட வசதிகளுடன் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments