ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!!

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 30ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர் ஷங்கர் எம் வேணுகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவிகள் பட்டம் பெற்ற பிறகும் தொடர்ந்து கற்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

உங்களின் வாழ்க்கை சிறக்க மனதை ஒருநிலைப்படுத்தியும், வலிமை> ஆர்வம் மற்றும் உயர்கோக்குடன் நடைமுறைக்கு கேற்பவும் செயல்பட வேண்டும். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அத்துடன் தற்காலச்சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக் கொண்டு சாதனைப் பெண்களாகத் திகழ வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் உயர்திரு ஆர்.சுந்தர் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது மாணவிகள் பட்டம் பெற்ற இந்த நாள் அவர்களின் வாழ்க்கையில் கொண்டாடப்பட வேண்டிய  நாள் என்றும் வெற்றின் பாதை கடினமானது என்பதை உணர்ந்து மாணவியர் அதற்கேற்ப செயல்படவேண்டும் என்று குறிப்பிட்டு வாழ்த்தினார். 

கல்லூரி முதல்வர் முனைவர்.கி.சித்ரா அவர்கள் மாணவிகளின் சாதனைகளையும் பல்கலைக்கழக அளவில் மாணவிகள் பெற்ற சிறப்புகளையும் குறிப்பிட்டுப் பட்டம் பெற்ற அனைவரையும் பாராட்டிப் பேசினார். பல்கலைக்கழக அளவில் 9 ரேங்குகளைப் பெற்றுள்ளனர். இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 578 மாணவியர் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments