விளாத்திகுளத்தில் சாலை மறியல் செய்ய முயன்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை!!
தொடர்ந்து விவசாயிகளை ஏமாற்றி வரும் பயிர் காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்தும். மிளகாய் உள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விளாத்திகுளத்தில் சாலை மறியல் செய்ய முயன்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை
டிசம்பர் 27 ந்தேதிக்குள் காப்பீடு விடுவிக்கப்பட்டு விடும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் டிசம்பர் 27 ந்தேதிக்குள் காப்பீடு விடுவிக்கப்படா விட்டால் டிசம்பர் 28 ல் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்து சாப்பிட்டு குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவிப்பு
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மிளகாய், உள்ளி, கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கு 2023-24 ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக பயிர்க் காப்பீட்டு இழப்பீடு வழங்க கோரி கடந்த 12/12/24 அன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இப்கோ டோக்கியோ நிர்வாகம் இதுவரை விவசாயிகளுக்கு மிளகாய் உள்ளி கொத்தமல்லி பயிர்களுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்திலும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் இப்கோ டோக்கியோ அலுவலர் டிசம்பர் 20,21 தேதிகளில் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இன்று வரை பயிர் காப்பீடு வழங்கப்படாத நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று காலை மறியலுக்கு முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளிடம் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ப. சுந்தர்ராஜன் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல் தோட்டக்கலை துறை விளாத்திகுளம் வட்ட துணை இயக்குநர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பேச்சுவார்த்தையில் விவசாயிகள் தரப்பில் மிளகாய் உள்ளி மல்லி உள்ளிட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் விவசாயிகளுக்கு மிளகாய் மற்றும் மல்லி பயிருக்கான காப்பீடு இழப்பீடு ரூபாய் 32 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொள்ள மறுத்த விவசாயிகள் இன்சூரன்ஸ் கம்பெனி இதுகுறித்து பதில் சொல்ல கூறினர். அந்த அடிப்படையில் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சென்னை இயக்குனர் அலுவலகத்தில் பேசியதன் அடிப்படையில் 27. 12. 24 தேதிக்குள் இன்சூரன்ஸ் விடுவிக்கப்படும் எனவும், உள்ளி பயிருக்கு ரூபாய் 14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஒரு வாரம் காலத்துக்கு பின் ஏற்றப்படும் எனவும் தெரிவித்தனர். இந்த அடிப்படையில் 27.12 .24 தேதிக்குள் இன்சூரன்ஸ் தொகை விடுவிக்கப்படவில்லை என்றால் டிசம்பர் 28 அன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுடன் சமையல் செய்து சாப்பிட்டு குடியேறும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ந.பூங்கோதை, தூத்துக்குடி.
Comments