தமிழகத்தில் முதல் ஷோரூமாக கோவையில் ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட் துவக்கம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சென்னைக்கு அடுத்தபடியாக விரைவாக வளரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவையில் முன்னனி நிறுவனங்கள் தங்களது விற்பனை சந்தையை விரிவு படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான உயர்தர பர்னிச்சர்களை விற்பனை செய்வதில் இந்திய அளவில் முன்னனி பிராண்டான ஸ்டேன்லி நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட டிசைன்களை கொண்ட ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட்" என்ற புதிய சொகுசு வடிவ விற்பனை மையத்தை கோவை அவினாசி சாலை அரசூர் பகுதியில் துவக்கி உள்ளனர்.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஸ்டான்லி லைஃப் ஸ்டைல்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனில் சுரேஷ் மற்றும் நியூமென்ஸ் பர்னிச்சர் நிறுவனத்தின் இயக்குனர் ஹரி பிரசன்னா ஆகியோர் பேசினர். சுமார் 18,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட இந்த ஷோரூமில்,சொகுசு வீடுகளுக்கு தேவையான,ஆடம்பரமான டிசைன்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை எங்களது ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட்" ஸ்டோர் தரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
கைவினைப் பொருட்களால் செய்யப்பட்ட சோஃபாக்கள் மற்றும் சாய்வான டைனிங் மேசைகள், படுக்கைகள் மற்றும் கை நாற்காலிகள் வரை, ஒவ்வொரு தயாரிப்பும் தரம் மற்றும் தனிப்பயனாக்கத்தில் ஸ்டான்லியின் தனி ஸ்டைலை பிரதிபலிக்கும் என குறிப்பிட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments