புதிய ரியல் மி 14 ப்ரோ மொபைல் போன் கோவையில் அறிமுகம்!!

கோவை: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல் மி 14 ப்ரோ மொபைல் பின் கோவையில் பிரபல நடிகை மிருனாளினி ரவி அறிமுகம் செய்து வைத்தார்.

மொபைல் போன் பிரியர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல் மி மொபைல் போன் தனது புதிய வரவான (Realme14pro )ரியல் மி 14 ப்ரோ மாடல் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை பிரிவான டிஜிட்டல் ஹப் ஷோரூமில் நடைபெற்ற இதற்கான விழாவில் பிரபல திரைப்பட நடிகை மிருனாளினி ரவி கலந்து கொண்டு புதிய ரியல் மி 14 ப்ரோ மாடல் மொபைல் போன் அறிமுகம் செய்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து நடைபெற்ற முதல் விற்பனையை  பயனீர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குரு பிரசாத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அசாருதீன்,துணை தலைவர் புகாரி,ரியல் மி மண்டல விற்பனை மேலாளர் ஜம்புநாதன்,துணை விற்பனை மேலாளர் பிரான்சிஸ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிதாக அறிமுகமாகி உள்ள  Realme 14 Pro  5G மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் மேஜிக் குளோ  எனும் மூன்று ஃபிளாஷ் அமைப்புடன், பல்வேறு வேரியண்டுகளுடன் வந்துள்ள ரியல்மி 14 ப்ரோ 5ஜி மாடலின் முக்கிய சிறப்பம்சமாக இதன் நிறம் மாறும் பேக் பேனல் டிசைன் போன் பிரியர்களை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments