கோழிவளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சியின் 2வது பதிப்பு நடைபெற்றது!!

கோவை: பிராய்லர் ஒருங்கிணைப்புக் குழு (BCC),  பவுல்ட்ரி கேர் மற்றும் பி.எப்.ஆர்.சி எனும் பவுல்ட்ரி பார்மர்ஸ் ரெகுலேட்டரி கமிட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து  கோவையில் கோழிப்பண்ணை மற்றும் கோழிவளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சியின் 2வது பதிப்பை நடத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

"மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கோழிப்பண்ணைத் தொழிலை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோழிப்பண்ணை தொழிலின் அணைத்து பிரிவிலும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் அவசியம், அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோழிப்பண்ணையாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், மாணவர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் கோயம்புத்தூர் மற்றும் கொங்கு மண்டல பகுதிகளில் இருந்தும், தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஹைதராபாத் மற்றும் கேரளா போன்ற பல்வேறு தென்னிந்திய பகுதிகளில் இருந்தும் 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில், பி.எப்.ஆர்.சி. அமைப்பின் மேலாண்மை ஆலோசகர் ராம்ஜி ரகுநாதன், மேலாண்மை ஆலோசகர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்:-

கோழி வளர்ப்பில் தமிழ்நாட்டின் தேசிய அளவில் சிறந்து விளங்குகிறது.  பல ஆண்டுகளாக, தமிழ்நாடு இந்தத் துறையில் முதலிடம் பெற்று வருகிறது. இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க, இத்துறையின் அணைந்து பிரிவுகளிலும் நவீன தொழில்நுட்பத்தை சேர்த்துக்கொள்வது மிக அவசியம். இன்று நடைபெறும் நிகழ்வு இதில் பங்கேற்கக்கூடிய அனைவரும் இப்படி பட்ட தொழில்நுட்ப முன்னேற்றத்தை தங்கள் பிரிவுகளில் அடைவதற்கான வழிகள் என்ன, அதனால் என்னென்ன முன்னேற்றங்கள் கிடைக்கும் என்பதை பற்றி விளக்குகிறது என்றார்.

கோழிவளர்ப்பு  துறையில் தொழில்முனைவு பற்றிப் பேசுகையில், ராம்ஜி தமிழ்நாட்டில் அதன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பற்றி எடுத்துரைத்தார். கோழி வளர்ப்பு 40 ஆண்டுகளுக்கு முன்பு குறைவாக இருந்த நிலையில், அது இப்போது மாநிலம் முழுவதும் பரவலாக விரிவடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இன்று, பல விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையிலான கோழி வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், இது அவர்களின் குடும்பங்களை மேம்படுத்தவும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த வாய்ப்புகளைப் பெறவும் உதவியுள்ளது என்று அவர் கூறினார். இந்தத் துறையில் மேலும் வளரவும் செழிக்கவும் தமிழ்நாடு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments