5 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட அளவிலான அத்லடிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
அதன்படி, குழந்தை மாணவ,மாணவிகளுக்கான 5 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
முன்னதாக இதன் துவக்க விழா கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் பரசுராம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கூடுதல் தொழிலாளர் நீதீமன்ற நீதியரசர் மேதகு அருணாச்சலம் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி சார்ட்டர்ட் பிரசிடென்ட் வழக்கறிஞர் பிரபு சங்கர்,ஜி.எஸ்.டி.துணை ஆணையர் டோலா திருப்பதி, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி தலைவர் டாக்டர் உமா பிரபு,,டாக்டர் தசரதன் பள்ளியின் தாளாளர் நிரஞ்சனி,கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி துணை தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு நாள் போட்டியாக நடைபெற்ற இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 32 பள்ளிகளில் இருந்தும் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஜூனியர் குழந்தைகளுக்காக நடைபெற்ற இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் கலந்து குழந்தை மாணவ,மாணவியர்கள் ஆர்வமுடன் தங்களது விளையாட்டு திறன்களை நிரூபித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments