பொள்ளாச்சியில் அட்வான்ஸ்டு குரோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் கிளினிக் துவக்கம்!!


பொள்ளாச்சி 28, ஜனவரி 2025: இந்தியாவின் முன்னணி ஹேர் & ஸ்கின் கிளினிக் நிறுவனமான குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக்கின் புதிய கிளை பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது 77 வது கிளையாகும்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தென்னிந்திய நடிகை வாணி போஜன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ,  அட்வான்ஸ்டு குரோஹேர் மற்றும் குளோஸ்கின் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சரண் வேல்; பொள்ளாச்சியில் உள்ள அட்வான்ஸ்டு குரோஹேர் மற்றும் குளோஸ்கின் நிறுவனத்திற்கான பிரான்சைசி  பார்ட்னர் திருமூர்த்தி; பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் ஷியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி வர்த்தக மகளிர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தர்ஷனா சந்திரகாந்த் ஆகியோர் முன்னிலையில், புதிய கிளினிக்கை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்தப் புதிய கிளினிக், முடி வளர்ச்சிக்கான மேம்பட்ட சிகிச்சையை வழங்குகிறது, இதில் பெர்குடேனியஸ் ஃபியூ முடி மாற்று அறுவை சிகிச்சை, ஆக்ஸிஜன் லேசர் சிகிச்சை - US FDA முடி புத்துணர்ச்சி லேசர் சிகிச்சை; பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா (PRP) PRO+ - ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியாவிற்கான சிகிச்சை மற்றும் விரிவான தோல் பராமரிப்பு சிகிச்சைகளும்  அடங்கும்.

நிகழ்ச்சியில் பேசிய பிராண்டின் நிறுவனர் சரண் வேல், கோவையில்  எங்களுக்கு ஆர்.எஸ். புரம் மற்றும் அவினாசி சாலை என இரண்டு கிளைகள் உள்ளது. சிகிச்சை பெற பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு  எங்கள் வாடிக்கையாளர்கள் வந்தனர்.

இப்போது பொள்ளாச்சியில் எங்கள் கிளினிக்கைத் தொடங்கியதால், பொள்ளாச்சியில் இருந்து முடி வளர்ச்சி மற்றும் தோல் சிகிச்சையில் சிறந்து விளங்க விரும்புவோர்  தங்கள் சொந்த ஊரிலேயே பெறலாம்" என்று  அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் முழு அர்ப்பணிப்புடன் சேவை, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் முடி வளர்ச்சிக்கான அணுகக்கூடிய தீர்வுகளை வழங்குவதற்கு மேம்பட்ட GroHair & GloSkin கிளினிக், மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத அணுகுமுறைகளை கொண்ட  விரிவான சிகிச்சைகளை வழங்குகிறது.

முடி மீண்டும் வளரும் வகையில், குளுதாதயோன், ஹைட்ராஃபேஷியல், க்யூ ஸ்விட்ச்டு லேசர், கெமிக்கல் பீல், போடோக்ஸ், ஃபில்லர்ஸ், த்ரெட் லிஃப்ட், ஃபுல் பாடி லேசர், ஃபேஸ் பிஆர்பி, மருக்கள் அகற்றுதல் மற்றும் பல  தோல் சிகிச்சைகளை  குளோ கிளினிக் வழங்குகிறது.

"முடி தொடர்பாக எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி நாங்கள் ஆய்வு செய்கிறோம், பின்னர் எங்கள் நிபுணர்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் மூலம் அதிநவீன சிகிச்சையை வழங்குகிறோம்," என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை வாணி போஜன், இந்த புதிய கிளினிக்கைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தோல் மற்றும் முடியைப் பராமரிப்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று , சிகிச்சை தேவைப்படும் எவரும்  குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக்குகளிலிருந்து பெறலாம் , என்றார்.

அட்வான்ஸ்டு குரோஹேர் மற்றும் குளோஸ்கின்  நிறுவனம் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம் (கொல்கத்தா) மற்றும் மகாராஷ்டிரா (புனே) ஆகிய மாநிலங்களில்  உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 77 கிளினிக்குகளைக் கொண்டுள்ளது, மேலும் மார்ச் 2025 இல் அதன் 100 கிளினிக்குகளை தொடங்க இலக்கு வைத்துள்ளது. ராஜமுந்தாரி மற்றும் நாமக்கல்லில்  அதன் அடுத்த கிளையை தொடங்கப்படவுள்ளது.

வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் என  ஏராளமானோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments