கோவை சரவணம்பட்டி பகுதியில் காலணிகளுக்கென பிரத்தேக கண்காட்சி நடைபெற்றது!!

கோவையில் நடைபெற்ற பிரத்யேக காலணிகள் கண்காட்சி -  சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு வரை பல்வேறு விதமான காலணிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உள்நாட்டு உற்பத்திக்கான காலணிக்கு தேவையான மூலப்பொருட்களின் இறக்குமதி வரியை 22 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தால் காலனி ஏற்றுமதியில் உலக அளவில் முதன்மை நாடாக இந்தியா வர முடியும் என வாக்குரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நௌஷாத் தெரிவித்துள்ளார்.

ஆடைக்கு ஏற்ப விதவிதமான காலணிகள் அணிய வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் இருக்கும். இந்த நிலையில் இளைஞர்கள் மற்றும் பெண்களை கவரும் விதமாக கோவை சரவணம்பட்டி பகுதியில் காலணிகளுக்கென பிரத்தேக கண்காட்சி நடைபெற்றது. 

வாக்குரூ நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக காலணிகளுக்கென நடைபெற்ற பிரத்தேக வர்த்தக கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை விதவிதமான காலனிகள் மற்றும் ஷூ-க்கள்  காட்சிப்படுத்தப்பட்டது.இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதும் உள்ள காலணி மொத்த வியாபாரிகள், ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து பேசிய வாக்குரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நௌஷாத் , இந்த வருடத்தில் காலணிகள் மற்றும் ஷூ க்கள் என 1000 புதிய மாடல்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்.இந்த காலணிகள் தயாரிப்பில் வியட்நாம், இந்தோனேசியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் வேகமாக வளர்ந்து வருகிறது.அதே போல உள்நாட்டு உற்பத்திக்கான காலணிகளின் மூலபொருட்களின் இறக்குமதி வரியை 22 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக குறைத்தால் காலணிகள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் உலக அளவில் இந்தியா முதன்மை நாடாக வர முடியும் என தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.


Comments