மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வருமான வரி செலுத்தும் நடைமுறையிலும் பின்பற்ற வேண்டும்! - சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கோரிக்கை!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கந்தர்வகோட்டை பிப் 02 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ. தங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மக்களவையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வருமான வரி தொடர்பான அறிவிப்பில் வருமான வரி விதிப்பில் இரண்டு வகையான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. புதிய நடைமுறை பழைய நடைமுறை என்று பின்பற்றப்படுகிறது.
புதிய நடைமுறையில் முதல் 4 லட்சம் ரூபாய்க்கு வரி கிடையாது. 4 முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம். 8 முதல் 12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம். 12 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம். 16 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம். 20 முதல் 24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம். 24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம். பழைய நடைமுறையில் பழைய வருமான வரி முறையை பொறுத்தவரையில் வருடந்தோறும் 2.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது. 2.5 லட்சம் முதல் ஐந்து லட்சத்துக்கு 5 சதவீதம் வரி.
5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம் வரி. அதாவது 5 லட்சத்துக்கு மேல் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு லட்சத்துக்கும் அரசுக்கு 20 ஆயிரம் ருபாய் வரி கட்ட வேண்டும்.
10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி. ஒருவர் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தால் ஒவ்வொரு லட்சத்துக்கும் 30 ஆயிரம் ரூபாய் வரி கட்ட வேண்டும் என்று உள்ளது தற்போது பழைய நடைமுறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய நடைமுறையில் கடந்த பட்ஜெட்டில் 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 12 லட்சமாக அது உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள நிலையில்
தற்போது ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய வருமான வரி நடைமுறையில் 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ள அறிவிப்பு 12 லட்சத்தில் ஒரு ரூபாய் இருந்தால் கூட அவர்கள் 12 லட்சத்திற்கும் சேர்த்து வரி செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. அதனை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். 13 லட்சம் ஒருவருக்கு வருமானம் இருந்தால் அவருக்கும் 12 லட்சத்திற்கு வருமான வரி விலக்கு அளித்துவிட்டு மீதமுள்ள வருமானத்திற்கு மட்டும் வரியை செலுத்த வேண்டும்
என்ற வருமான வரி செலுத்தும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். பழைய நடைமுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதாவது ஐம்பது சதம் முதல் 80 சதவீதம் வரை 75 ஆயிரம் ரூபாய் விலக்கும், 80 சதவிகித்திற்கு மேல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமான வரி விலக்கும் பழைய நடைமுறையில் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய நடைமுறையில் மாற்றுத்திறனாளிகளின் சதவீதத்தின் அடிப்படையில் எவ்வித விலக்கும் அளிக்கப்படவில்லை. பழைய நடைமுறையில் விலக்கு அளிக்கப்படுவது போல புதிய நடைமுறையிலும் கட்டாயமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சதவீதத்தின் அடிப்படையில் வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாண்புமிகு ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம். என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈஷா.
Comments