பி.பி.ஜி.கல்வி குழுமம் சார்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் துணை தலைவர் அக்ஷய் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேல் கலந்து கொண்டார்.
முன்னதாக பி.பி.ஜி கல்விக் குழுமத்தலைவர் மருத்துவர் எல்.பி தங்கவேலு பேசுகையில்,ஒரு சமூகத்தின் வாழ்வியல் சூழல்களை மாற்றும் திறன் கல்விக்கு மட்டுமே உண்டு என்று கூறிய அவர்,அத்தகய கல்வியை போதிக்கும் ஆசிரியர்களுக்கு, விருது வழங்குவதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் முனைவர் குழந்தைவேலு, சமூகத்தில் மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கவதே ஆசிரியரின் தலையாய கடமை என்றார்.
விழாவில்,கோவை,பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளி,,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இதில் தமிழ் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொருளாதாரம், வணிகவியல் என பல்வேறு துறை சார்ந்த 142 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர்.
நிகழ்வின் இறுதியாக தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஹரிதாஸ் நன்றியுரை ஆற்றினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments