வனப் பகுதிக்குட்பட்ட சாலைகளில் சுற்றுலா பயணிகள் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் தடை விதிக்க வேண்டும் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை மற்றும் பசுமை குரல் அறக்கட்டளை சார்பாக மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை மாலை நேரத்தில் மலைப்பாதையில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கவேண்டும்.    வனம் வனவிலங்குகளுக்கானது.

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரை காட்டு யானை தாக்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது வேதையளிக்கிறது.

வால்பாறை வாட்டர் பால்ஸ் அருகே டைகர் பள்ளத்தாக்கு சாலையில் காட்டு யானை‌ நடுரோட்டில் நின்றிருந்தது. வால்பாறையில் இருந்து வந்தவர்களும் பொள்ளாச்சியில் இருந்து சென்றவர்களும்  காட்டு யானையின் அருகில் செல்லாமல் சற்றுத்தொலைவில் அச்சத்தோடு நின்று கொண்டு இருக்கையில், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற வெளிநாட்டு பயணி ஒருவர் யானையை கடக்க முயன்றபோது. காட்டு யானை ஆக்ரோசமாக சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தோடு தள்ளி விட்டு உயிரை காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பை வழங்கியது. அந்த நபர் எழுந்து கொஞ்சம்கூட அச்சமில்லாமல் அவரது வாகனத்தை எடுக்க முயன்றபோது காட்டு யானை ஆக்ரோசமாக மீண்டும் தாக்கி அவர் உயிரிழக்க நேரிட்டது. என்பது வேதனையளிக்கிறது. இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை வருத்தம் தெரிவிக்கிறது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுக்குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். வனப்பகுதிகளில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அல்லும் பகலும் காவலில் இருந்தாலும் வனவிலங்குகள் சாலையை கடக்கிறபோது உள்ளுர்வாசிகளுக்கு தெரியும் அவர்கள் ஒதுங்கி விடுகிறார்கள். சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது அவைகளை துன்புறுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். வனத்துறை அதிகாரிகளை மட்டுமே குறை கூறுவதை விட்டு விட்டு, மேலும் பல மனித உயிர்கள் பலியாகாமல் இருக்கவும், வனம் வனவிலங்குகளுக்கானது என்பதால் வனவிலங்குகள் வனப்பாதைகளில் எந்தவொரு இடையூறுமின்றி சுதந்திரமாக பயணிக்கவும், புலிகள் காப்பகத்திற்குட்பட்ட  வனப்பகுதி சாலையில் செல்ல, மாலை நான்கு மணிக்குமேல் உள்ளூர்வாசிகளை தவிர, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்பதை இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை மற்றும் பசுமைக்குரல்  அறக்கட்டளை வனத்துறைக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Comments