ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி!!

 

21 தங்கம் உட்பட 42 பதக்கங்கள் வென்று அசத்திய முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள்.

கோவை சின்ன வேடம்பட்டி: குரும்ப பாளையம் மற்றும் சேரன்மாநகர் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ மாணவிகளுக்கு  தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம்,அடிமுறை,வேல்கம்பு,வாள்வீச்சு, வளரி மான்கொம்பு , சுருள்வாள் , வாள்வீச்சு,போன்ற,பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத் தரப்பட்டு வருகிறது.மேலும் இங்கு  நன்கு பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகள் தேசிய சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு  வெற்றி  பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இதே பயிற்சி கழகத்தில், பயிற்சி பெற்று வரும் 14 மாணவர்கள் , ஸ்ரீலங்கா சிலம்பம் ஃபெடரேஷன்  சார்பாக நடைபெற்ற  சர்வதேச அளவிலான ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா நுவாரலாயா நகரில் நடைபெற்ற இதில், முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களான வர்ஷா, சஞ்சீவ்,ஜிஷ்னு ஜீவித், ஶ்ரீ ரானிஷ்,ரித்விக் பிரணவ்,ஆண்டோ, நிவான் மைக்கேல்,ஶ்ரீ ராம்,ஹிருத்திக், மித்ரன்,கோகுல் கிருஷ்ணா,தரணீஸ்,ரேவன், பால முருகன்,மற்றும் ஹர்ஷித் என 14 மாணவர்கள் பங்கு பெற்றனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இதில் மலேசியா,தாய்லாந்து, இந்தோனேஷியா,இந்தியா என பல்வேறு நாடுகளில் இருந்தும்  இருந்து நானூறுக்கும்  மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சிலம்பு சண்டை, அலங்கார வரிசை, மான் கொம்பு, வேல் கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. 

பல்வேறு  பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது ஆற்றல் மிகு சிலம்பத்திறனை வெளிப்படுத்தி 21 தங்கம்,14 வெள்ளி,7 வெண்கலம் என 42 பதக்கங்கள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்.

இந்நிலையில் பதக்கங்களுடன் கோவை திரும்பிய மாணவ,மாணவிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் துணை பயிற்சியாளர்கள் மணிகண்டன், பாலாஜி,தரனீஸ் ஆகியோருக்கு   கோவை  இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதில் வெற்றி கோப்பையுடன் கோவை திரும்பிய மாணவர்கள் பேசுகையில், முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் நிறுவனரும், தலைமை பயிற்சியாளருமான பிரகாஷ் ராஜ்  வழங்கிய தொடர் பயிற்சிகள் காரணமாக,போட்டிகளில் வெற்றி பெற முடிந்ததாக தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments