கோவையில் புதிய கைட்ஸ் (KITES) சீனியர் கேர் மையம் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் திறந்து வைப்பு!!

கோவை: இந்தியாவின் முன்னனி முதியோர் பராமரிப்பு மையமான (KITES) கைட்ஸ் சீனியர் கேர் கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சீனியர் கேர் மையத்தை துவங்கியது

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ராஜகோபால் ஜி, டாக்டர். ஏ. எஸ். அரவிந்த் மற்றும் டாக்டர் ரீமா நாடிக் ஆகியோரால் நிறுவப்பட்ட லைஃப்பிரிட்ஜ் சீனியர் கேர் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு பிரிவான KITES சீனியர் கேர்,  பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில்   தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக கோவையில்   (KITES) கைட்ஸ் சீனியர் கேர் சரவணம்பட்டி பகுதியில் புதிய மையத்தை துவக்கி உள்ளது.

இதற்கான துவக்க விழா லைஃப் பிரிட்ஜ் சீனியர் கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரீமா நதீக் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பிரபல ஊடவியாலளர்,தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் கலந்து கொண்டு புதிய கைட்ஸ் சீனியர் கேர் மையத்தை திறந்து வைத்தார்..

20,000. சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புதிய மருத்துவமனை, இடைநிலை மற்றும் மறுவாழ்வு பராமரிப்பு, நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் ஓய்வு பராமரிப்பு போன்ற சிறப்பு சேவைகளை வழங்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சகல வசதிகள் அடங்கிய 59 அறைகளுடன் முதியோர்களுக்கு மன அமைதி,ஆரோக்கிய உணவு,மருத்துவ சேவைகள் என அனைத்து வித சேவைகளையும் இந்த மையம் செயல்பட உள்ளதாக கைட்ஸ் சீனியர் கேர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments