ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா!!

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை குளோபல் ஹெட் ஆரக்கிள் பிராக்டிஸ் எல்டிஇ மின்ட்ட்ரி நியூவின் துரை கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் பட்டங்களை பெற்ற 325 மாணவ மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர். முன்னதாக விழா பேருரையாற்றிய சிறப்பு விருந்தினர் நியூவின் துரை மாணவ, மாணவிகள் மத்தியில் கூறியதாவது

தொழில்நுட்ப துறையில் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றது. நமது தேவைகளுக்கான வேலை களை நாம் தான் தேடி கொள்ள வேண்டும்.. உதாரணமாக கார்களின் சந்தையில், ஆண்டு தோறும் கார்களில் புதிய புதிய பரிமாணங்கள், கண்டு பிடிப்புகள் வெளி வந்து கொண்டே உள்ளது. இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு விதை, விஞ்ஞான வளர்ச்சி மட்டுமில்லை உங்களை போன்ற இளைய தலைமுறையினர்களின் புதிய புதிய கண்டுபிடிப்புகளின் வெளிபாடுதான் என நான் நம்புவதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாடங்களில் உள்ள தியரிகளை செய்முறை விளக்கங்கள் செய்தது எல்லாம் உங்களது படிப்புக்கு உதவியாக இருந்து இருக்கலாம், அனால் இனி வாழ்க்கையில் செய்யும் தொழில்நுட்ப பயிற்சி முறைகள் தான் புதிய புதிய அனுபவங்களை கற்று தரும். அனுபவங்களின் அடிப்படை மட்டுமே உங்களது  எதிர்காலத்தை தீர்மானிக்கும், என்று தெரிவித்தார் மேலும் இன்று பட்டங்களை பெறும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் தனது வாழ்த்துக்ளை தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர், டேவிட் ரத்தினராஜ், மற்றும் மாணவ மாணவியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments