தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போட்டியில் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், சிவகங்கை,தேனி, புதுக்கோட்டை, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 68 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்தன. பூஞ்சிட்டு பந்தயத்திற்கு 10 கிலோ மீட்டர் தூரமும், சின்ன மாட்டிற்கு 14 கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
விழாவில் விளாத்திகுளம் திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், நவநீதக் கண்ணன், காசி விஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, அன்பு ராஜன், திமுக செயற்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் இம்மானுவேல், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், திமுக கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மகளிர் அணி உட்பட போட்டியை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments