அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு மக்கள் பாராட்டு!!
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் உயரமான பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவது,மற்றும் கழிப்பறை தேவைகளுக்காக நீர் வசதி செய்வது ஒரு சவாலாக உள்ளது..
இது குறித்து தகவல் அறிந்த ரெப்கோ பைனான்ஸ் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் நிதியின் மூலமாக குடிநீர் தேவை மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுத்துள்ளது.
ரெப்கோ வங்கியின் தலைவர் இ. சந்தானம் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி. தங்கராசு ஆகியோர் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள 12 அரசு பள்ளிகளுக்கு கழிவறை கட்டுதல், கிணறுகள் அமைத்து குடிநீர் வசதிகள் செய்து தருதல் மற்றும் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மேடைகள் அமைத்தல் போன்ற நலத் திட்டங்களை நிறைவு செய்து கடந்த பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் பள்ளிகளின் பயன்பாட்டுக்கு வழங்கினர்.
கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் அமைந்துள்ள சூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி, ஆரோட்டுப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி, மரப்பாலம் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளி, கூடலூர் கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இரண்டாவது மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பந்தலூர் பகுதியில் உள்ள பொன்னூர் அரசு உயர்நிலைப்பள்ளி, தேவாலா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தேவாலா வாழவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, கரியசோலை ஊராட்சி ஒன்றி தொடக்கப்பள்ளி, புஞ்சை வயல் அரசு நடுநிலைப்பள்ளி, குந்தலாடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இந்த நலத்திட்டங்களால் பயன் பெற்றுள்ளன.
இந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பல ஆண்டுகளாக போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு பள்ளி கல்வித் துறை, தமிழ்நாடு அரசின் நம் ஊரு நம்ம பள்ளி திட்டப் பிரதிநிதிகள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் தாயகம் திரும்பிய மலையக மக்கள் கூட்டமைப்பு சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தனது சி எஸ் ஆர் நிதியிலிருந்து இது வரை சுமார் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய் மதிப்பிலான தொகையினை இத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments