கோவை கே.ஜி கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது!!

கோவை கே.ஜி கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது ஆறாவது ஆண்டாக நடைபெற்ற இதில்,எட்டு சாதனை பெண்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கே.ஜி., கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமியை நினைவு கூறும் விதமாக  ஒவ்வொரு ஆண்டும்  சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன் படி ஆறாவது ஆண்டாக திவ்யலட்சுமி நினைவு விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்.,கல்லூரி  வளாகத்தில் நடைபெற்றது.

கே.ஜி., குழுமத்தின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், கே. ஜி. ஐ. எஸ். எல். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,ஆத்விக் கோவிந்த் அசோக் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில்,இந்தியாவில் ஐ.டி.பெண்கள் இயக்க முன்னோடியும் தொழில் முனைவோருமான கீதா கண்ணன்,மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான வழக்கறிஞர் அஷ்வினி அங்காடி,ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வு படை அதிகாரி அபரஜிதா ரம்தயானி,வயநாடு நிலச்சரிவின் போது சாகசமாக  மருத்துவ பணி  செவிலியர் சபீனா,சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி கிருஷ்ணன்,புல்டோசர் உள்ளிட்ட கன ரக வாகன சாகச ஓட்டுனர் ராதாமணி அம்மா,வடகித்தியம்மாள்,விதை தீவு பிரியா ராஜ நாராயணன்,உள்ளிட்ட எட்டு சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற வர்ணபந்தம் எனும் தேசிய கலை கண்காட்சியை பார்வையாளர்கள் பலர் கண்டு வியந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments