ஜி.கே.என்.எம். வெளி நோயாளிகள் மருத்துவ மையத்தில் முதலாம் ஆண்டு விழா சிறப்புடன் நிறைவு செய்துள்ளது!!

ஆசியாவின் மிகப்பெரிய வெளி நோயாளிகள் பரிசோதனை மையமான ஜி.கே.என்.எம். மருத்துவ மையத்தின் முதலாம் ஆண்டு விழாவில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஊழயர்கள் என அனைவரும் இணைந்து வண்ண பலூன்களை வானத்தில் பறக்க விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் ஜி.கே.என்.எம்.மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் வெளிநோயாளிகள் மருத்துவ மையம் (IOP). மருத்துவ சிகிச்சைகளை அனைத்து தரப்பு மக்களும் எளிதில் பெறக்கூடிய சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய வெளிநோயாளிகள் மருத்துவ மையமாக திகழும் இம்மையம் நோயாளிகளுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை வழங்கி ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் இதற்கான முதலாம் ஆண்டு விழா ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தில் நடைபெற்றது. 

குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ S.பதி தலைமையில் நடைபெற்ற விழாவில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஊழியர்கள் என மருத்துவமனை  சார்ந்த அனைத்து பணியாளர்களும் இணைந்து வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினமும் 1200 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சேவை வழங்கி வரும் இந்த மையத்தில் சரியான நேரத்தில் மற்றும் விரிவான வெளிநோயாளிகளுக்கான மருத்துவ சேவைகளை வழங்குதல், பல்வேறு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் ஆயுர்வேதம், யோகா போன்ற மாற்று மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து தனிச்சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்குதல். சிறப்பு சேவைகளை விரிவுபடுத்துதல்: அனுபவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களை கொண்ட மெனோபாஸ் கிளினிக் மற்றும் நீரிழிவு பாத பராமரிப்பு கிளினிக் ஆகியவற்றின் மூலம் தங்களுக்கு தேவையான பிரத்தியேகமான மருத்துவ சிகிச்சைகளை வெளிநோயாளிகள் பெறும் வகையில் வசதிகள் உள்ளன.

இந்நிகழ்ச்சியில் , ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments