தி ஐ ஃபவுண்டேஷன்' மருத்துவமனையில் குளுக்கோமா நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது!!
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி மற்றும் குழந்தைகள் நலக் கண் மருத்துவர் முரளிதர், 'குளுக்கோமா நோயாளிகள் சிறப்பாக சிகிச்சை பெறவேண்டும் என்பதற்காக மார்ச் 10 முதல் 15 வரை 'தி ஐ ஃபவுண்டேஷன்' மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் இலவச கண் பரிசோதனை வழங்கப்படும். அறுவை சிகிச்சை மேற்கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கப்படும். மருத்துவமனை சார்பில் பல்வேறு ஊர்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன' என தெரிவித்தனர்.
உலக குளுக்கோமா வாரம் என்பது குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக குளுக்கோமா சங்கத்தின் (WGA) உலகளாவிய முயற்சியாகும். தொடர்ச்சியான உலகளாவிய நடவடிக்கைகளின் மூலம், நோயாளிகள், கண் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள், பார்வையைப் பாதுகாப்பதில் பங்களிக்க அழைக்கப்படுகிறார்கள். குளுக்கோமாவைக் கண்டறிவதற்காக வழக்கமான கண் (மற்றும் கண் நரம்பு) சோதனைகளை மேற்கொள்ளுமாறு அனைவரையும் அறிவுறுத்துவதே இதனுடைய குறிக்கோள்.
எனவே, 40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய், உயர் கிட்டப்பார்வை, காயம், வீக்கம், ஸ்டீராய்டு உபயோகித்தல் மற்றும் பிறவி கண் கோளாறுகள் உள்ளவர்களுக்கு குளுக்கோமா வர அதிக வாய்ப்புள்ளது“ என டாக்டர். சித்ரா ராமமூர்த்தி, மருத்துவ இயக்குநர் மற்றும் குளுக்கோமா பிரிவு ஆலோசகர், மற்றும் டாக்டர் ஆர், முரளிதர் தி ஐ பவுண்டேஷன், கோவை, குளுக்கோமா மற்றும் குழந்தைகள் கண் மருத்துவ பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் உறுதிசெய்கிறார்.
வழக்கமாக எங்களிடம் பரிசோதனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் குளுக்கோமா சம்பந்தப்பட்ட பார்வைத்திறன் பரிசோதனைகளான கண் நீர் அழுத்தம் மற்றும் கண்ணில் அடைப்பு உள்ளதா என்பதை கோனியோஸ்கோபி மூலம் அறிந்து, பெரிமெட்ரி மூலம் விஷவல் பீல்ட்ஸ் குறைபாடு மற்றும் ஓசிடி மூலம் ரெட்டினா நரம்பின் தன்மை அறிந்து, சொட்டு மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை மூலம் குளுக்கோமாவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுத்துவருகிறோம்.
கடந்த காலத்தில் குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 50 சதவீதம் நோயாளிகள் மட்டுமே இந்த நோய்க்கான கண்பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments