பொள்ளாச்சி தனி மாவட்டம் ஆகுமா.? ஆகாதா.?
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பழனியை தலைமையாக கொண்டு மடத்துக்குளம், உடுமலை தாலூக்காக்களை இணைத்து தனி மாவட்டம் உருவாகும் என கூறப்பட்டுவருவதால் பொள்ளாச்சி மாவட்டம் ஆவது கேள்விக்குறியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ளது பொள்ளாச்சி வருவாய் கோட்டம். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் சார்-ஆட்சியர் அலுவலகம் கடந்த 1857ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவருகிறது. ஆரம்ப காலத்தில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய பொள்ளாச்சி வருவாய் கோட்டம் செயல்பட்டுவந்தது. கடந்த 1983ம் ஆண்டு மே மாதம் பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்த திருப்பூர் தனி வருவாய் கோட்டமாக பிரிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தை தனி மாவட்டமாக உருவாக்கப்படவேண்டும் என்று கோரிக்கை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டும் பொள்ளாச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படாமல் இருந்துவருகிறது. பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட திருப்பூர், கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி தனி மாவட்டமாக உருவானது. ஆனால், பொள்ளாச்சி கோட்டம் மாவட்டமாக தற்போது வரை உருவாகவில்லை. பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பொள்ளாச்சியில் இருந்து பிரிந்த திருப்பூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு போதிய பரப்பளவு, மக்கள்தொகை, தாலூக்காக்களின் எண்ணிக்கை போன்றவை போதுமானதாக இல்லாமல் இருந்ததால், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த உடுமலை பகுதி புதிய கோட்டமாக மாற்றப்பட்டு திருப்பூருடன் இணைக்கப்பட்டது. உடுமலை திருப்பூருடன் இணைக்கப்பட்டவுடன் உடுமலை யில் இருந்து புதிதாக மடத்துக்குளம் வட்டம் உருவாக்கப்பட்டது.
இப்படி பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டதுதான் தற்போது உள்ள உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களாகும். தற்போது, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள் உள்ளது. பொள்ளாச்சி கோட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 118 ஊராட்சிகள், இரு நகராட்சிகள்,9 பேரூராட்சிகளுடன் உள்ளது. பாராளமன்ற தொகுதியே பொள்ளாச்சி என்ற பெயரில் 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியே உள்ளது.
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக பிரிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனென்றால், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில் சேக்கல்முடி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட தலைமை இடமான கோவை செல்ல 125 கி.மீ., பயணிக்கவேண்டியுள்ளது. வால்பாறை போன்ற மலை வாசஸ் தலத்தில் வசிக்கும் மக்கள் மலைப்பகுதியில் இருந்து கோவை செல்ல 5 மணி நேரத்திற்கும் செல்லவேண்டியுள்ளது. மீண்டும் திரும்பி தங்கள் பகுதிகளுக்கு செல்ல மீண்டும் 5 மணி நேரம் பயணிக்கவேண்டியுள்ளது. இப்படி தங்கள் குறைகள் அல்லது கோரிக்கைகள் போன்றவற்றை தெரிவிக்க ஒரு நாள் முழுவதையும் செலவிட்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்றவர்கள் இல்லாமல் போனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுபோன்ற சூழலில் பொள்ளாச்சி தலைமையிடமாக கொண்டு மாவட்ட உருவானால் வால்பாறை மக்கள் தலைமையிடம் வந்து செல்வது பாதி நேரமும், பயணிக்கும் தூரமும் குறையும். இதுதவிர ஆனைமலை தாலூக்காவில் வசிக்கும் மக்களும் கோவை சென்றுவருவதில் 80 கி.மீ பயணிக்கவேண்டும். பொள்ளாச்சி தாலூக்கா மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல 45 கி.மீ., பயணிக்கவேண்டியுள்ளது.
ஆகவே பொள்ளாச்சியை தலைமை இடமாக கொண்டு மாவட்டம் உருவானால், பொள்ளாச்சியிலேயே வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மக்கள் 15 முதல் 40 கி.மீ தூர பயணத்திலேயே தங்கள் குறைகளை சரிசெய்யமுடியும். உடுமலை வட்டத்தில் திருமூர்த்தி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போதுள்ள மாவட்ட தலைமையிடமான திருப்பூர் செல்ல 80 கி.மீட்டருக்கும் மேல் பயணிக்கவேண்டும். அதே பொள்ளாச்சி வருவது என்றால் 35 முதல் 40 கி.மீ.,பயணித்தால்போதுமானது. உடுமலை வட்டத்தை திருப்பூருடன் இணைக்கும்போது, அந்த பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியுடனேயே எங்களை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி பொள்ளாச்சி கோட்டத்துடன் இருந்து பழைய உடுமலை பகுதியான அதாவது தற்போதுள்ள உடுமலை மடத்துக்குளம் வட்டங்களை இணைத்தால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 வட்டங்கள் கிடைத்துவிடும்.பொள்ளாச்சியுடன் இருந்த உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிமக்கள் ஏற்கனவே பொள்ளாச்சி கோட்டத்துடன் இருந்தவர்கள் என்பதால், அவர்களுக்கும் நிர்வாக ரீதியாக பொள்ளாச்சி வருவது சுலபமானதாக இருக்கும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த 6 வருவாய் வட்டங்களையும் இணைத்தால் பரப்பளவில் 2771 சதுர கீலோமீட்டர் பரப்பும், 12 லட்சத்து 63 ஆயிரம் மக்கள் தொகையுமாக, 219 கிராமங்களும் கணக்கில் வரும். ஒரு மாவட்டம் உருவாக 2500 சதுர கி.மீட்டர் பரப்பும், 10 லட்சம் மக்கள் தொகையும், 200 கிராமங்களும் இருந்தால் போதுமானதாகும். வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை சேர்ந்த மக்களின் குறைகளை போக்கவும், இந்த பகுதிகளில் உள்ள நிர்வாக ரீதியான பிரச்சனைகளை சரிசெய்யவும் பொள்ளாச்சி மாவட்டம் என்பது தற்போது உருவாக்கப்படவேண்டியது அவசியம் ஆகிறது.
பொள்ளாச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் பொள்ளாச்சியுடன் இணைக்க உத்தேசிக்கப்படும் பகுதிகள்.
நராட்சிகள்...3
பொள்ளாச்சி நகராட்சி, உடுமலை நகராட்சி, வால்பாறை நகராட்சி,
பேரூராட்சிகள்...14
ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், கோட்டூர், ஜமீன்ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர், கிணத்துக்கடவு,நெகமம், தளி, கனியூர், கொமரலிங்கம், மடத்துக்குளம், சங்கரராமநல்லூர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஊராட்சி ஒன்றியங்கள்...7
பொள்ளாச்சி வடக்கு(39 ஊராட்சிகள்), பொள்ளாச்சி தெற்கு(26 ஊராட்சிகள்), ஆனைமலை(19 ஊராட்சிகள்), கிணத்துக்கடவு(34 ஊராட்சிகள்), உடுமலை(39 ஊராட்சிகள்), குடிமங்கலம்(20 ஊராட்சிகள்), மடத்துக்குளம்(11 ஊராட்சிகள்) மொத்தம் 188 ஊராட்சிகள்.
பொள்ளாச்சி மாவட்டமாவது கேள்விக்குறி பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவானால், பழனி மாவட்டம் உருவாக மக்கள் தொகை, தாலூக்காக்கள் எண்ணிக்கை போன்றவற்றுக்காக மடத்துக்குளம் மற்றும் உடுமலை தாலூக்காக்களை இணைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இணைத்தால் பொள்ளாச்சி மாவட்டம் உருவாக தாலுக்காக்கள் எண்ணிக்கை, பரப்பளவு, கிராமரங்களின் எண்ணிக்கை, மக்கள்தொகை போன்ற அடிப்படை தகுதியில்லாமல் போய்விடும். இதனால், பொள்ளாச்சி மாவட்டம் ஆவது கேள்விக்குறியாகிவிடும் என பொள்ளாச்சி பகுதி மக்கள் புலம்பிவருகின்றனர். பழனி மாவட்டத்துடன் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலையில் வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி பகுதி மக்கள் கூறுகையில், நீண்ட காலமாக பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை இருந்துவந்தும் தற்போதுவரை பொள்ளாச்சி மாவட்டம் ஆவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால், பழனி மாவட்டம் கோரிக்கை சில ஆண்டுகளுக்கு முன்புதான் எழுந்தது. பழனி தற்போது மாவட்டம் ஆவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் அந்தப்பகுதியை சேர்ந்த ஆளும் கட்சியினர் முயற்சி் செய்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனால், பொள்ளாச்சி பகுதியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பொள்ளாச்சியை மாவட்டம் ஆக்க போதிய முயற்சி எடுக்கவில்லை. கண்டுகொள்வதில்லை. குறிப்பாக பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சில ஆண்டுகளாக அதைப்பற்றி பேசுவதில்லை.
அதிமுகவினரும் தற்போது பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை குறித்து பேசுவதில்லை. எம் எல் ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தற்போது மாவட்டம் குறித்து பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. பொள்ளாச்சி கோட்டத்தில் வசிக்கும் எம் எல் ஏக்கள் செ.தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், அமுல் கந்தசாமி என யாரும் பேசுவதில்லை. எப்படியோ பொள்ளாச்சிக்கு மாவட்டம் ஆகும் தகுதியிருந்தும் பல்வேறு அரசியல் காரணங்களால் தற்போதும், எதிர்காலத்திலும் மாவட்டம் ஆகும் தகுதியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது என்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-M.சுரேஷ் குமார்.
Comments