கோவையில் தென்னிந்திய அட்டைபெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 2வது பொதுக்கூட்டம் மற்றும் தொழில்நுட்ப அமர்வு நடைபெற்றது!!

கோவை நவ இந்தியா பகுதியில் தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் சிக்ப்மா வின் தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 2வது பொதுக்கூட்டம் மற்றும் தொழில்நுட்ப அமர்வு கோவை மாவட்ட தலைவர் ஆர். சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் fcbm போர்டு உறுப்பினர் கே.பி.சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அட்டைப்பெட்டி உற்பத்தியில் அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த மிஷின்களை பயன்படுத்துதல் மற்றும் எவ்வாறு சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்தார்.

மேலும் மாநிலத்தலைவர் பிரபா மஞ்சுநாத், மாநில செயலாளர் சுதிர்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சங்க வளர்ச்சி மற்றும் அட்டைப் பெட்டி உற்பத்தி சார்பாகவும் சிறப்புரையாற்றினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து மாவட்ட தலைவர் சிவக்குமார் கூறுகையில் sicbma பொதுக்கூட்டம் மற்றும் தொழில்நுட்ப அமர்வு தற்போது நடைபெறுகின்றது. இதில் அட்டைப் பெட்டி உற்பத்தியில் புதிய அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி நாம் எவ்வாறு உற்பத்தி செய்வது. மற்றும் புதிய சந்தைப்படுத்துதல் குறித்தும் ஆலோசனைகள்  மேற்கொள்ளப்பட்டது என்றார்.மேலும் குறைந்த விலையில் தரமான அட்டைப்பட்டிகள் தயாரித்து வழங்கவேண்டும் சமீபகாலமாக  கிராப்ட்டு காகிதங்கள் விலையேற்றத்துடன் காணப்படுகிறது அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட 300 கும் மேற்பட்டோர் கலந்து கொணட்னர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments