கோவை கொடிசியா வளாகத்தில் ஒரு இலட்சம் சதுர அடியில் பில்ட் இன்டெக் கண்காட்சி!!

நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில் சர்வதேச,தேசிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கொடிசியா நிர்வாகத்தினர் தகவல்.

 தென்னிந்திய அளவில் கட்டுமான துறை தொடர்பான மிகப்பெரும் வர்த்தக கண்காட்சியாக  பில்ட் இன்டெக் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 14 வது எடிஷனாக வரும் ஏப்ரல் 18 ந்தேதி துவங்கி 21 பில்ட் இன்டெக் 2025 ன் கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா தலைமை  அலுவலகத்தில் நடைபெற்றது.

கொடிசியா தலைவர் கார்த்திகேயன் மற்றும் செயலாளர் யுவராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,பில்ட் இன்டெக் கண்காட்சியின் தலைவர், ஞானவள்ளல் மற்றும் துணை தலைவர் பாபு ஆகியோர் பேசினர்.

தென்னிந்தியாவின் மாபெரும் கண்காட்சியில் ஒன்றாக நடைபெற உள்ள பில்ட் இன்டெக் கண்காட்சியில்   கட்டிடக்கலை, கட்டுமானம், பொறியியல், கட்டுமான பொருட்கள், மற்றும் அதனைச் சார்ந்த பிரிவுகளுக்கான கண்காட்சியாக இது அமையும் என தெரிவித்தார். 

கட்டுமான துறை சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது என கூறிய அவர்,  ஏப்ரல் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை கொடிசியா அரங்கில் காட்சிப்படுத்தப்படும் இக்கண்காட்சியில்,  இந்தியாவின் முதன்மையான கட்டிடம் மற்றும் கட்டுமான கண்காட்சியாக நடைபெறும் என்று தெரிவித்தார். 

இந்த கண்காட்சியில், நவீன கட்டுமான பொருட்கள், சேவைகள், மற்றும் கட்டுமான இயந்திர தொழில்நுட்பங்கள், கட்டுமான முறைகள் மற்றும் கட்டுமான திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற உள்ளது எனவும், கட்டுமானத்துறை சார்ந்த விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கும், வியாபார தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும், இக்கண்காட்சி ஒரு மிகச்சிறந்த தளமாகும் என தெரிவித்தார். 

இக்கண்காட்சியில், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா பாண்டிச்சேரி, மற்றும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது சர்வதேச அளவில்  இருந்து முன்னணி கட்டிட தொழில் வல்லுநர்கள் தங்களது அரங்குகளை அமைக்க உள்ளதாக  தெரிவித்தனர்.

கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் சுமார் 200 கோடி ரூபாய் அளவில் இந்த கண்காட்சியில் வர்த்தகம் எதிர்பார்ப்பதாக கொடிசியா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

-சீனி, போத்தனூர்.

Comments