அகில இந்திய அளவில் நடைபெற்ற ஜே.இ.இ.தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை!!
சென்னை ஐஐடி - என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜே.இ.இ அட்வான்ஸ்டு எனும் நுழைவு தேர்வு ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.
உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்பட்டு வரும் இந்த தேர்வு அண்மையில் நடைபெற்ற நிலையில் இந்தியா முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வை எதிர் கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இத்தேர்வில் இந்திய அளவில் கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இயற்பியல்,வேதியியல்,கணிதம் என 7 பாட வாரியாக மொத்தம் 100 சதவீதங்களை பெற்றுள்ளனர். இதில் கோவை மண்டல ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த 229 மாணவர்கள் அகில இந்திய தர வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கான பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்றது.
ஸ்ரீ சைதன்யா கல்வி இயக்கங்களின் இயக்குநர் .சுஷ்மா போப்பனா மற்றும் தமிழ்நாடு செயலாக்க தலைவர் ஹரிபாபு ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இது குறித்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில் பள்ளி ஆசிரியர்களின் வழி நடத்தலும்,கடின உழைப்புமே இந்த வெற்றிக்கான காரணம் என தெரிவித்தனர்.
குறிப்பாக இந்திய அளவில் இலட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய தேர்வில் 5 மாணவர்கள் தரவரிசை 1000க்குள் பெற்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடதக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments