நாங்கள் உணவு சாப்பிட்ட பிறகு நீங்கள் போனால் போதும்! தெனாவட்டாக காட்டு ராஜா.
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இரவு நேரங்களில் அரசு பஸ், பால் வாகனம், பேப்பர் வாகனம் மற்றும் 108 வாகனம் போன்றவை அவசரத்திற்கு செல்லும் இதர வாகனங்கள் கவனமாக செல்ல வேண்டும். வனவிலங்குகள் தண்ணீர் இன்றி உணவின்றி அலைகின்றனர்.
சாலை நடுவில் ஓரங்களில் நிற்கும் காட்டு யானைகளை கண்டு அச்சப்படவோ அச்சுறுத்தவோ துன்புறுத்தவோ கூடாது என வனவிலங்கு காப்பகத்தார் வலியுறுத்தி வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.
ஆழியார், அட்டகட்டி, வாட்டர் பால், கவுற்கள், ஐயர் பாடி, புதுத்தோட்டம் ஆகிய பகுதிகளில் அதிகளவு வனவிலங்குகள் நிற்க கூடும். ஆகையால் கவனமாக செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு வனவிலங்கு காப்பகத்தார் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
Comments