காட்டு ராஜாக்கள் உலா வரும் நேரங்களில் வாகன நெரிச்சல்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் ஆழியார் செக்போஸ்ட் முதல் வாட்டர்பால் வரை உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் வன விலங்குகள் இரவு நேரங்களில் நடமாடும் நேரங்களில் அதிக அளவு வாகன நெரிசலினால்  விபத்துக்கள் ஏற்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை புலி, கரடி மற்றும் யானைகள் உலா வரும் நேரங்களில் இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் வால்பாறையை சுற்றி பார்த்துவிட்டு வாட்டர்பால், அட்டகட்டி ஆழியார் வழியே செல்வதை தடுக்க வேண்டும். ஏனெனில் நேற்று மாலை 8 மணி முதல் 11 மணி வரை அவ்வழியில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்டிருக்
கிறது. 

இரவு நேரங்களில் வாகனங்கள் ஆழியாறில் இருந்து மேலே வருவதும் வாட்டர் பாலில் இருந்து கீழே செல்வதும் கட்டுப்படுத்த வேண்டும்.அத்தியாவசியமின்றி வாகனங்களை அனுப்பக்கூடாது. 

வாகன நெரிசலினால் பால் வண்டி, பேப்பர் வாகனம், அரசு பேருந்து ஓட்டுனர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகும் அவல நிலை உருவாகியுள்ளது. 108 வாகனம் வருவதற்கும் மிகவும் இடையூறாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து 

-திவ்யக்குமார்.

Comments