கோவை கண்ணழகி மீனா கண்களை காக்க கருத்து !!!

கோவை ஆர் எஸ் புத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக கானடோரா லாசிக் கருவியின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல திரைப்பட நடிகை மீனா  பேசும்போது :

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த புதிய வகையான மெஷின் கான்டோரா லாசிக் (Contoura Lasik) மிஷின் அறிமுகப்படுத்துவது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் இது நமது ஊர், நமது நாட்டில் சிறந்த மெஷின் என்றும் கேள்விப்பட்டதாகவும், அறிவியல், மருத்துவம் எங்கேயோ அதிவேகமாக முன்னேறி கொண்டு உள்ளதாகவும், நமது உடல் ஆரோக்கியம் பற்றி கூறும் போது, பீ.பி., இதயம் மட்டும் தான் முக்கியத்துவம் தருகிறோம் ஆனால் கண்களின் ஆரோக்கியமும் முக்கியமானது, கண்கள் என்பது நமது முக்கியமான உறுப்பு என்றும், அந்தக் கண்களை ஆரோக்கியத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கண்ணழகி மீனா கண்களை காக்க இது போன்ற கருத்துக்களை தெரிவித்தார். 

மேலும், மைசூர்பாக் என்பது கோவையில் மட்டும் தான் மிகவும் பிரபலமாக கிடைக்கும். ஆனால் இப்பொழுது சென்னையில் எல்லாம் நிறைய கிடைக்கிறது என்றும், முன்பெல்லாம் கோவையில் கிடைக்கும் மைசூர் பாக்கு மட்டும் தான் நன்றாக இருக்கும். அதேபோன்று கோவையில் உள்ள பிரபல நகைக்கடை மற்றும் துணிக்கடையில் துணிமணிகள் வாங்க எனக்கு பிடிக்கும் என்று கூறினார். 

கோவை மக்களுக்கு நீங்கள் என்ன கூற ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு, கோவை தமிழை, கொங்கு தமிழை ஒருபோதும் மறக்க முடியாது, இங்கு இருந்து வந்தவர்கள் நிறைய பேர் நல்ல நடிகர்களாக இருக்கிறார்கள். நான் அடிக்கடி வரும் ஊர் கோவை தான். முன் பிருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் கோவை நல்ல வளர்ச்சியை கண்டு உள்ளது என பேசினார்.

முன்பெல்லாம் கோவைக்கு அடிக்கடி வந்து கொண்டு இருந்தேன், ஒரு இடத்திற்கு ஷூட்டிங்க்கு செல்ல வேண்டும் என்றால் கோவை வந்து தான் செல்லும் படி இருக்கும். இப்பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை வந்து இருக்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது என்று கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments