கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்!!

கோவையில் வரும் 27 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

தமிழகம் முழுவதும் இருந்து 800 க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு காளைகள் கலந்து கொள்ள உள்ளது.

யாரும் அடக்க முடியாத காளை உரிமையாளருக்கு முதல்வர் அவர்கள் சார்பில் சொகுசு காரும், மாபெரும் சிறந்த வீரருக்கு ஒரு சொகுசு காரும் துணை முதல்வர் வழங்க உள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை செட்டிபாளையம், கொச்சின் புறவழிச்சாலையில், தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் 27 ந்தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழாவை நடத்த உள்ளது. தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் தலைமையில், தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான தளபதி முருகேசன் முன்னிலையில் நடைபெற உள்ள இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழாவை மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தமிழர் பண்பாடான இந்த ஜல்லிக்கட்டை பறைசாற்றும் வகையில்,  ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தின் முகப்பில், ஜல்லிக்கட்டுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான காளையை, இளம் காளை ஒருவர் அடக்குவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் செல்பி எடுத்து மகிழலாம். இந்த செல்பை பாயிண்டை கோவை தெற்கு மாவட்ட செயலளரும், பேரவையின் தலைவருமான தளபதி முருகேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், மேயர் ரங்கநாயகி, துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் மகேந்திரன் மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவரும்,  திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான தளபதி முருகேசன் பேட்டியின்போது கூறுகையில்;- 

முதலமைச்சர் உத்தரவின் பேரில், மரியாதைக்குரிய மாண்புமிகு செந்தில் பாலாஜி அவருடைய தலைமையிலே வருகின்ற 27ஆம் தேதி இதே மண்ணிலே மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் அவர்கள் துவகி வைக்க உள்ளார். தமிழகம் முழுவதும் இருந்தும் 800 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்கின்றன. அந்த காளைகளை அடக்க 500க்கும் மேற்பட்ட காளையர்கள் கலந்து கொண்டு இந்த காளைகளை அடக்கி இரண்டு கார்களையும் பரிசாக பெற இருக்கின்றார்கள். தமிழக முதல்வர் அவர்கள் சிறந்த காளைக்கு,  யாரும் அடக்க முடியாத காளைக்கு ஒரு காரை பரிசாக அளிக்கின்றார். அதேபோல, அடக்க முடியாத காளையை அடக்குகின்ற அந்த மாபெரும் வீரர்களுக்கு இளம் தலைவரும்,  துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்  அவர்கள் ஒரு காரை பரிசாக அளிக்கின்றார். அதேபோல இரண்டாவதாக வருகின்ற மூன்றாவதாக வருகின்ற 800 வீரர்களுக்கும், காளைகளுக்கும் நமது பொறுப்பு அமைச்சர் அவர்கள் சிறப்பு பரிசுகளை அளிக்க இருக்கின்றார். இந்த விளையாட்டு போட்டியை காண கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதற்குண்டான முன்னேற்பாடுகள் பிரமாண்டமான முறையில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், நமது பகுதியில் இருக்கின்ற அரசு அதிகாரிகளும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பத்தாயிரம் பேர் அமர்கின்ற வகையிலே ஒரு மாபெரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இதுவரை இந்த மாதிரி ஒரு ஜல்லிக்கட்டு யாரும் நடத்தாத வகையில்  இந்த கொங்கு மண்டல ஜல்லிகட்டு இருக்கும்.  

எனவே, இந்த போட்டியை காண இந்த கொங்கு மண்டலத்தில் அனைவரும் வந்து தமிழகத்தினுடைய தமிழருடைய வீரத்தையும் விவேகத்தையும் போற்றுகின்ற இந்த ஜல்லிக்கட்டினை காண வருக வருக என்று அன்புடன் அழைக்கிறேன். இதுவரை  2000 பேர் பதிவு செய்துள்ளனர்.  750 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும். செல்பி பாயிண்ட் தமிழகத்தில் யாரும் அமைக்கவில்லை அதையும் நாங்கள் அமைத்துள்ளோம்.

3000 வாகனங்கள் வந்தாலும் நிறுத்த முடியும் அளவில் பார்க்கிங் வசதி உள்ளது வருடம் வருட வருடம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து கோவையில் இனிமேல் நடத்தப்படும் என கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments