தண்டு மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கந்தசாமி ஆர்ட்ஸ் ராஜ மன்னார் மற்றும் மகாலட்சுமி குடும்பத்தினர் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 14ம் தேதி கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து,15ம் தேதி கொடியேற்றம், பூச் சாட்டு, 17ம் தேதி அக்னிச்சாட்டு, 18ம் தேதி திருவிளக்கு வழிபாடு மற்றும் வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா,19ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 20ம் தேதி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா 23ம் தேதி சக்தி கரகம், அக்னி சட்டி ,பால்குடம் கோனியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தண்டுமாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் நடைபயணம் வந்தனர் 24 ஆம் தேதி மகா அபிஷேகம் உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெற்றது
இதை தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கந்தசாமி ஆர்ட்ஸ் ராஜ மன்னார் மற்றும் மகாலட்சுமி குடும்பத்தினர் ஏற்பாட்டில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தண்டு மாரியம்மனை தரிசித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments