நீரில் மூழ்கி மூன்று கல்லூரி மாணவர்கள் உயிர் இழப்பு!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆழியார் அணை பகுதியில் கோவையில் இருந்து சுற்றுலா சென்ற பூந்தமல்லி சேவல் பகுதி சேர்ந்த பிசியோ தெரபி தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர் தருண் ரேவந்த், ஆண்டோ,ஜெனிப் ஆகிய மூன்று பேர் குளிக்கச் சென்று சிறிது நேரம் ஆகியும் மூவரும் வரவில்லை. கூட சென்ற நபர்கள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர்களை வரவழைத்து காணவில்லை என தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் விரைந்து வந்த போதும் மாணவர்களை உயிருடன் காப்பாற்ற முடியாமல் அவர் மூவரின் உடலை மட்டும் மீட்டனர். பின்பு மூவரின் உடல்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் சுற்றுலா வந்த மற்று மாணவ மாணவிகள் கதறியழும் காட்சி பொதுமக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
Comments