அப்துல் கலாம் பள்ளி மாணவர்களுக்கு கணினிகள் வழங்கிய ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர்!!

கோவை: அப்துல் கலாம் பள்ளி : கணினிகள் வழங்கிய ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் - சிறந்த விஞ்ஞானிகளாக  மாணவர்களின் கல்விக்கு பயனு ள்ளதாக அமையும் என நம்பிக்கை!!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ட்ரீம் ஸ்பெஷல் பள்ளிக்கு மாணவர்களுக்கு கல்வி பயில ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சங்கத்தின் சார்பாக கணினிகள்  வழங்கப்பட்டது. 

இதுகுறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சங்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் பேசும்போது; ஸ்மார்ட் சிட்டி சார்பில், பள்ளியில் ஐந்து குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், குழந்தைங்களுக்கு ஏ.ஐ குவாட்டினேஷனுக்காகவும், டிஜிட்டல் இன்டெர்பேசுக்காக கணினி கேட்டதாகவும், அதை அவர்கள் செய்து கொடுத்து இருப்பதாகவும், இது அவர்களின் கல்விக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்ற வகையில் இதை அமைத்துக் கொடுத்து இருப்பதாக தெரிவித்தனர்.

பள்ளி நிர்வாகி பேசும் போது; ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ட்ரீம் ஸ்பெஷல் ஸ்கூல்,  இந்தப் பள்ளி ஆரம்ப கால தலையீட்டில் இருந்து துவங்குவதாகவும், அதன் பிறகு ஒன்பதில் இருந்து 14 வயது வரை ரெடினஸ் என்ற ஒரு கோர்ஸ் இருக்கிறது என்றும், டிஃபரென்டலி ஏபிள்ட் குழந்தைகளின் திறனுக்கு ஏற்றார் போல் கோர்சஸ் செட் செய்யப்பட்டு இருக்கிறது. ரோட்டரி கிளப் ஆஃப் ஸ்மார்ட் சிட்டி இன்று பள்ளிக்காக ஐந்து கணினிகளை வழங்கி இருக்கிறார்கள். குழந்தைகளின் கவனம் செலுத்தும் திறன் அதிகமாகும் என்பதற்காகவே இது போன்ற வழிமுறைகளை கடைபிடிக்கிறோம், இந்த கணினிகளை 40 குழந்தைகள் வரை உபயோகப்படுத்தலாம், அதே போல ஸ்மார்ட் சிட்டி, நடப்பாண்டில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறார்கள், இதே குழந்தைகளுக்கான சத்தான உணவாக இருக்க வேண்டும் என வழங்குகிறார்கள் என கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments