சுற்றுலா பயணிகளின் மிச்சமீதி உணவுகளை வனவிலங்குகள் சாப்பிடும் அவலநிலை!!


கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை புது தோட்டம் அருகாமையில் ஆலமரம் பஸ் நிலையம் முன்பு பாரலை எஸ்டேட் ஆஸ்பத்திரி மேல் தளம் உள்ள பகுதியில் புதிதாக குப்பை கிடங்கு உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் யானை,காட்டெருமை, சிங்கவால் குரங்குகள் மற்றும் இதர வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து பொது வழி சாலை உள்ளது. சாலையில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உணவு உட்கொண்டு விட்டு பின்பு உட்கொண்ட வேஸ்ட் பொருட்களை அப்பகுதியிலே விட்டு விட்டு செல்வதினால் சிங்கவால் குரங்குகள், காட்டு மாடுகள், யானைகள் போன்ற வனவிலங்கு உட்க் கொள்ளக் கூடிய அவல நிலை உருவாகுகிறது.

இதனைக் கண்டு அப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற புதிதாக உருவாகி வரும் குப்பை கிடங்குகளை அப்புறப்படுத்த வேண்டும். இதனால் அவ்வழியே வரும் வாகனங்களுக்கும்   இடையூறாக உள்ளது.

வனவிலங்குகள் இந்த உணவுகள் உட்கொண்டால் அவர்கள் இழப்பு மிகவும் அதிகமாக இருக்கும். இதனைக் கண்டு உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் புகார்கள் அளித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் 

-திவ்யக்குமார்.

Comments