பச்சாபாளையத்தில் அய்யப்ப சேவா சங்கம் துவக்க விழா...!!

பச்சாபாளையத்தில் அய்யப்ப சேவா சங்கம் துவக்க விழாவில் ரத்த தானம் செய்தும், பொது மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தும் சேவையாற்றிய கிளை சங்க நிர்வாகிகளுக்கு பொது மக்கள் தரப்பில் பாராட்டு குவிந்து வருகிறது.
38 ஆண்டு கால அய்யப்ப பக்தரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் மதுக்கரை மின்வாரிய ஊழியரும் செயற்குழு உறுப்பினருமான  பச்சாபாளையம் புஷ்பராஜ் முகாமில் ரத்த தானம் செய்தார்.

கோவையில், மதுக்கரை அருகே அய்யப்ப சேவா சங்க கிளை துவக்க விழாவில் 25-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தும், கிராம மக்கள் நூறுக்கும் மேற்பட்டோர் இலவச மருத்துவ பரிசோதனை செய்தும் பயன் பெற்றனர். இந்த சேவையை செய்த அய்யப்ப பக்தர்களை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.   

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் கிளை துவக்க விழா பச்சாபாளையம் கிராமத்தில்  நடந்தது. இதில் அகில பாரத அய்யப்ப சேவா சங்க கோவை மாவட்ட நிர்வாகிகள் தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் நித்தியானந்தன், பொருளாளர் இளங்கோ, துணை செயலாளர் அச்சுதன் உன்னி, கோவை மாவட்ட முகாம் அலுவலரும் ஈச்சனாரி கல்பனா அலோய் காஸ்டிங்ஸ் நிறுவன உரிமையாளருமான சரவணன் மற்றும் 85 வயதான மூத்த அய்யப்ப பக்தர் குருசாமி ஆர்.எஸ்.புரம் வெங்கடேஷ், மாவட்ட மூத்த நிர்வாகி மதுக்கரை குருசாமி செல்வராஜ் தலைமை வகித்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே பச்சாபாளையம் கிராமத்தில் நடந்த அய்யப்ப சேவா சங்க கிளை துவக்க விழாவில் புதிய கிளை நிர்வாகிகளை மாவட்ட நிர்வாகிகள் பாராட்டி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கிளை தலைவர் சதாசிவம் மயில்சாமி, செயலாளர் தேவராஜ், பொருளாளர் ஞானவேல், செயற்குழு உறுப்பினர்கள் என்.புஷ்பராஜ், ஜெயபாலன், குமரகுருபரன், சிவராமன், கனகராஜ், ராமராஜ், துணை தலைவர்கள் செல்வராஜ், வடிவேல், காளிமுத்து, சசிக்குமார், மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன், துணை செயலாளர்கள் தீபக் மெய்ஞானம், கார்த்திகேயன்  முன்னிலை வகித்தனர். 

சாய் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் டாக்டர் பிரதீப் கிருஷ்ணா தலைமையில் இலவச ரத்த தான முகாம், மருத்துவ பரிசோதனை, ஆலோசனை முகாம் நடந்தது. இதில், 25 பேர் ரத்த தானம் செய்தனர். மேலும் நூறுக்கும் மேற்பட்டோர் இலவச மருத்துவ பரிசோதனை, ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர். 

அய்யப்ப சேவா சங்க கிளை துவக்க விழாவில் நடந்த ரத்த தான முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை  முகாமில் சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள் திரளாக  பங்கேற்றனர்.

பிம்ஸ் மருத்துவமனை மற்றும் காவிரி சாரிடபிள் டிரஸ்ட் ரத்த வங்கி சார்பில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மூத்த நிர்வாகி மதுக்கரை  குருசாமி செல்வராஜ் பேசுகையில், "ஆன்மீகத்தில் பய பக்தியுடன் இருப்பவர்கள் அய்யப்ப பக்தர்கள். இவர்களிடம் பக்தி மட்டுமின்றி சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருக்கும். அதனால் தான் பச்சாபாளையம் கிராமத்தில் 40க்கும் மேற்பட்டோர் விரதம் பூண்டு சபரிமலை சென்று வருகின்றனர். குறிப்பாக, பக்தர் புஷ்பராஜ் உள்ளிட்டவர்கள் 38 வருடத்திற்கும் மேலாக அய்யப்ப சுவாமியிடம் பக்தி கொண்டு இப்போதும் விடாமல் விரதம் இருந்து ஆண்டுதோறும் தொடர்ந்து, சபரிமலைக்கு சென்று வருகின்றனர். இந்த சங்கம் மூலம் டிரஸ்ட் துவக்கி, மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்"  என்றார். 

விழாவில், ரத்த தானம் செய்த அய்யப்ப பக்தர் - முன்னாள் மாணவர் பச்சாபாளையம் புஷ்பராஜ்க்கு மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த (பேட்ஜ் பாகுபாடு இல்லாதது) முன்னாள் மாணவ மாணவிகள் அடங்கிய மலரும் நினைவுகள் குழு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மூத்த பக்தர் கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடேஷ் பேசுகையில், "அய்யப்ப சுவாமி மீது பக்தி கொண்டு விட்டால் மனம் எதிலும் நாடாது. அய்யன் திருநாமத்தையே அனு தினமும் உச்சரிக்க வைக்கும். அய்யப்ப மலைக்கு வந்த சிறுமி, பேச்சு வந்து மகிழ்ச்சியில் திளைத்ததையும் நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்’’ என நெகிழ்ச்சியுடன் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் பச்சாபாளையம் கிளைச்சங்க புதிய தலைவர், பொருளாளர், செயலாளர், துணை தலைவர்கள், துணை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

விழாவின் சிறப்பு விருந்தினர் மூத்த பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர், கவிஞர், தினகரன் நாளிதழ் உதவி ஆசிரியர் நாச்சிபாளையம் ஆர்.கே.விக்கிரம பூபதிக்கு ஓய்வு ஆசிரியர், மாவட்ட மூத்த நிர்வாகி மதுக்கரை கலைமகள் டைப்பிங் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் செல்வராஜ் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

 மேலும் அய்யப்ப பக்தர்கள் மதுக்கரை தொழிலதிபர் முத்தழகு, மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரும், நாச்சிபாளையம் வணிகர் சங்கக் கிளை தலைவருமான செந்தில் (எ) ராஜன், தினகரன் நாளிதழ் உதவி ஆசிரியரும் கவிஞருமான நாச்சிபாளையம் ஆர்.கே.விக்கிரம பூபதி,  மற்றும் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். விழாவின் சிறப்பு விருந்தினர் மூத்த பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர், கவிஞர், தினகரன் நாளிதழ் உதவி ஆசிரியர் நாச்சிபாளையம் ஆர்.கே.விக்கிரம பூபதிக்கு ஓய்வு ஆசிரியர், மாவட்ட மூத்த நிர்வாகி மதுக்கரை கலைமகள் டைப்பிங் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் செல்வராஜ் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். 

இதையடுத்து, அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் கிளைச் சங்கம் துவக்க விழாவில்  ரத்த தானம் செய்தவரும் , 38 ஆண்டுக்கும் மேல் சபரிமலைக்கு விரதம் பூண்டு, மாலை அணிந்து தொடர்ந்து செல்லும் அதி தீவிர அய்யப்ப பக்தர் - முன்னாள் மாணவர் பச்சாபாளையம் புஷ்பராஜ்-க்கும், புதிதாக பொறுப்பேற்ற கிளை சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும்  மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த (பேட்ஜ் பாகுபாடு இல்லாதது) முன்னாள் மாணவ மாணவிகள் அடங்கிய மலரும் நினைவுகள் குழு சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கூட்டத்தில், அய்யப்ப சுவாமி மகிமைகளை பக்தர்களிடம் கொண்டு செல்வது,  கிளை சங்கத்திற்கு என அறக்கட்டளை துவங்குவது, வங்கிக் கணக்கு துவங்கி வரவு-செலவு கணக்குகளை முறையாக பராமரிப்பது, அடுத்து வரும் ஆண்டுகளில் சபரிமலைக்கு பச்சாபாளையம் பகுதியில் இருந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையை பல மடங்கு அதிகப்படுத்துவது, அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில், அய்யப்ப சேவா சங்க கிளை துவக்க விழாவில் புதிய கிளை நிர்வாகிகளை மாவட்ட நிர்வாகிகள் பாராட்டி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த முன்னாள் மாணவ மாணவிகள் இணைந்த பேட்ஜ் பாகுபாடு அற்ற மலரும் நினைவுகள் - குழு

மதுக்கரை தொழிலதிபர்,  அய்யப்ப பக்தர் முத்தழகு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

தொடர்ந்து,   சங்க கிளை துவக்க விழாவில் 25-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தும், 100-க்கும் மேற்பட்டோர் இலவச மருத்துவ பரிசோதனை செய்தும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகளை சேவையை செய்த, நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்து அய்யப்ப பக்தர்களையும் மற்றும் மாவட்டம், கிளைச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.  

நாளைய வரலாறு செய்திகளுக்காக

- சிறப்பு செய்தியாளர் : 

-ஆர்.கே.விக்கிரம பூபதி.

Comments