கோவை உக்கடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகச் சக்கர சிங்கம் சிலை திறப்பு !!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் இணைந்து சிலையை திறந்து வைத்தனர்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் பெருமையை பறைசாற்றும் இந்தச் சிலை திறப்பு விழாவில், நமது பாரம்பரிய கலைகளின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பரதநாட்டியம், கதக்களி மற்றும் புனித சிறப்பு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்ததுடன், தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது.
கோவை மாநகரின் அடையாளமாக உயர்ந்து நிற்கும் இந்த அசோகச் சக்கர சிங்கம் சிலை, நகரின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவதுடன், பொதுமக்களிடையே தேசியப் பற்றையும் பெருமிதத்தையும் வளர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சிலை திறப்பு விழாவில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments