கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி!!
இதற்கான காசோலை வழங்கும் விழா, கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 ரோட்டரி செயலகத்தில் நடைபெற்றது.
கௌசிகா நீர்க்கரங்கள் இந்த திட்டத்தில், வையம்பாளையத்திலிருந்து தேவம்பாளையம் வரையிலான 6 கி.மீ., தூரத்திற்கு, கௌசிகா நீர்க்கரங்கள், ரோட்டரி மாவட்டம் 3201 உடன் இணைந்து மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதற்கான விரிவான திட்ட அறிக்கை, தொழில்நுட்ப ரீதியாகவும், சுற்றுப்புற சூழல் மற்றும் சமுதாய ஒத்துழைப்புடன் தயார் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் 3201 மேம்பாட்டு குழு உறுப்பினர் குழு தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின், கோயம்புத்தூர் ஆலம் ரோட்டரி கிளப் தலைவர் டெய்ஸி மார்ட்டின், கௌசிகா நீர்க்கரங்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோவை ரோட்டரி கிளப் உறுப்பினர் சூர்யா குமாரி, ரோட்டரி மாவட்டம் 3201 உதவி கவர்னர் கவிதா கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோட்டரி மாவட்டம் 3201 கவர்னர் என்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார்.
ஆறுகளை புதுப்பிக்கவும், தண்ணீரை சேமிப்பதிலும் கடந்த 15 ஆண்டுகளாக கௌசிகா நீர்கரங்கள் அமைப்பை உருவாக்கி திரு செல்வராஜ் பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பு, நீர்நிலைகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது.
ரோட்டரி மாவட்டம் 3201, இந்த அமைப்புடன் இணைந்து நீண்ட கால அடிப்படையில் காட்டு பண்ணாரியம்மன் கோவில் முதல் தேவனாம்பாளையம் தடுப்பணை வரை 20 கி.மீ., தூரத்துக்கு மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 6 கி.மீ., தூரத்துக்கு எவ்வாறு கால்வாய்களை தூர் வாருவது மற்றும் சுற்றுச் சூழலை மீண்டும் கொண்டு வர கவனம் செலுத்தப்படும்.
புதுப்பிக்கும் இந்த திட்டம் மட்டுமின்றி, நீரோட்டத்தை மேம்படுத்தவும், தண்ணீரின் தரத்தை உயர்த்தவும், நிலையான சுற்றுச் சூழலை பாதுகாக்கும் சமுதாயத்தை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். இது பிற திட்டங்களுக்கு எடுத்துக்காட்டாகவும், முன்னோடியாகவும் இருக்கும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments