வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை திட்டங்கள்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் சேவையை செய்து வருகிறது ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம்.
தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி என பல்வேறு நேரடியான கிளை அலுவலகங்களுடன் செயல்பட்டு வரும் ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம் இந்த ஆண்டுக்கான பல்வேறு கல்வி உதவி திட்டங்களை அறிவித்துள்ளது.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஷாலோம் எஜுகேஷன் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.
நிறுவனத்தின் இயக்குனர் அனிதா காமராஜ் பேசுகையில்,வெளிநாடுகளில் மருத்துவம் பயில செல்ல ஆர்வமுடைய மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை எங்களது நிறுவனம் செய்து வருவதாக கூறிய அவர், அரசு புள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கென பிரத்தியேகமாக எவ்வித கட்டணமும் பெறாமல், இந்தியாவில் செலவாகும் அட்மிஷன், விசா, டாக்குமெண்டேஷன், விமான கட்டணம் என சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேவையை முற்றிலும் இலவசமாக வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
சுமார் 14 நாடுகளில் மருத்திவ கல்வி பயில்வதற்கான சேவைகளை வழங்கி வருவதாக கூறிய அவர்,வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன் ஏற்படுத்தி தருவதாக குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம் வழியாக வெளிநாட்டில் மருத்துவக்கல்வி (M.B.B.S/ M.D) பயில பதிவு செய்யும் முதல் 125 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 6 வருடத்திற்கான கல்வி கட்டணத்திலிருந்து 100 சதவீத விலக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments