தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் (LTSI) இணைந்து ஜூன் 14, 15, ஆகிய நாள்களில் கோவையில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாட்டை நடத்துகிறதும்
இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த முக்கியமான மருத்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் பழனிவேலு வழிகாட்டுதலில்,கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். ஆனந்த் விஜய் மற்றும் டாக்டர் மேக்னஸ் ஜெயராஜ் ஆகியோர் இந்த மாநாட்டை ஒருங்கிணைகின்றனர்.
தமிழ்நாடு உடல் உறுப்பு தான மாற்று ஆணையத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் இந்த மாநாட்டை ஜெம் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் அதிநவீன அறுவைசிகிச்சை நுட்பங்கள் – குறிப்பாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான ரோபோட் அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோபிக் செயல்முறைகள் குறித்த விரிவான விவாதங்கள் இடம்பெறுகிறது.
இந்தப்பயிற்சியில் அறுவை சிகிச்சை தயாரிப்பு நடைமுறைகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பு நுட்பங்கள் மற்றும் விரிவான நோயாளி நிர்வாக உத்திகள் உள்ளிட்ட நோயாளி பராமரிப்பின் முக்கியமான அம்சங்கள் அடங்கியுள்ளன. மேலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகளில் சமீபத்திய முன்னேற்றங்கள், ICU மருத்துவ ஊழியர்களுக்கான உறுப்புதான நெறிமுறைகள் மற்றும் விரிவான அறுவைசிகிச்சைக்குப் பிந்தையநோயாளி நிர்வாக உத்திகள் குறித்த விளக்கக்காட்சிகள் இடம்பெறுகின்றன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments