இந்திய அளவில் வேளாண் தொடர்பான முதன்மை கண்காட்சியான அக்ரி இன்டெக்ஸ் 2025!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வேளாண் தொடர்பான இந்திய அளவில் முதன்மையான அக்ரி இன்டெக்ஸ் 2025 எனும் வேளாண் கண்காட்சி வரும் ஜூலை 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கோவை கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது..
இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், அக்ரி இன்டெக்ஸ் 2025 தலைவர் ஸ்ரீஹரி, கொடிசியா செயலாளர் யுவராஜ், அக்ரி இன்டெக்ஸ் துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் பேசினர்.
ஜூலை 10 ந்தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற உள்ள 23 வது பதிப்பான அக்ரி இண்டெக்ஸ் கண்காட்சியில், மொத்தம் 7 அரங்கில் கோழி வளர்ப்பு, சோலார் வளாகம்,மற்றும் நாற்றுப் பண்ணை மற்றும் விலங்குகளுக்கான வெளிப்புற வளாகம் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்தியாவில் இருந்து டெல்லி,கேரளா,கர்நாடகா,ஆந்திரா,ராஜஸ்தான், ஹரியானா, உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொள்வதாகவும், மேலும் சர்வதேச அளவில் 5 நாடுகளில் இருந்து வேளாண் தொடர்பான நவீன இயந்திரங்கள் காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கண்காட்சிக்கு பொது பார்வையாளர்களுக்கி ஐம்பது ரூபாய் அனுமதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஒருங்கிணைப்பாளர்கள், விவசாயிகளுக்கு முற்றிலும் அனுமதி இலவசம் என தெரிவித்தனர்.
அதேபோல வேளாண் சூழலியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உயிரி தொழில்நுட்பம்,தேங்காய் நார் கயிறு மற்றும் வாசனைப் பொருள்,மலர் வளர்ப்பு, பசுமை குடில் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை காட்சிக்கு வைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
குறிப்பாக கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு தொழில், விவசாயிகளுக்கு அதிக லாபம் அளிக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள் குறித்தும் கண்காட்சியில் இடம் பெற உள்ளதாகவும்,இந்த கண்காட்சி புதிய தொழில் துவங்க உள்ள தொழில் முனைவோருக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
தொடர்ந்து அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியின் போஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments