கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் 123 வது பிறந்த நாள் ஜீலை 15.கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை கோட்டை ஒன்றிய செயலாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா காமராஜர் பிறந்த தினம் குறித்து பேசும்பொழுது;
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் கல்விக் கண் திறந்த காமராசர். அவர் பிறந்த ஜூலை 15ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என கலைஞர் 2006ஆம் ஆண்டு அறிவித்து நடைமுறைப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. காமராசர் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அளித்த முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்து, மாணவர்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை வளர்க்கவும், அவர்கள் கல்வி கற்க ஊக்கப்படுத்திடவும் கல்வி வளர்ச்சி நாள் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
காமராசர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்த ஒன்பது ஆண்டுகளும் தமிழகத்தின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது.
தமிழ்நாட்டின் கல்வியில் வளர்ச்சியில் பெறும் பங்காற்றியர் காமராஜர். மதிய உணவு திட்டம், கட்டாய கல்வி, இலவச சீருடை, பள்ளிகள் தொடங்குவது என தமிழ்நாட்டில் கல்வியில் புரட்சி செய்தவர் காமராஜர். ஏழை மக்களின் நாயகன், இந்தியாவின் கிங் மேக்கர், தமிழ்நாட்டில் கல்வியின் தந்தை, பெருந்தலைவர், கர்மவீரர், பச்சை தமிழன் என புகழுக்கு எல்லாம் சொந்தகாரர் காமராஜர்.
பல்வேறு பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன என்று பேசினார். கல்வி வளர்ச்சி நாள் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, தவளை ஓட்டம், சாக்கு ஓட்டம், உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி, செல்விஜாய் செம்ம ராகினி சகாய ஹில்டா கணினி உதவியாளர் தையல்நாயகி மழலையர் ஆசிரியை கெளரி மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments