80 இலட்சம் ரூபாய் செலவில் பன்னி மடை ஊர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பொது சாலை அமைத்த ஜி ஸ்கொயர்!!

சாலை வசதி அமைத்து கொடுத்த ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டு!!

கோவை: தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறைந்த விலையில் வீட்டு மனைகள் விற்பனை செய்வதில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் பல்வேறு இடங்களில் மெகா திட்டங்களில்  வீட்டு மனைகளை விற்பனை  செய்து வரும் ஜி ஸ்கொயர் அண்மையில் கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் தி விண்ட் (The Wind) எனும் புதிய வீட்டு மனைகள் விற்பனை திட்டத்தை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள  சாலை குறுகலான குண்டும் குழியுமாக இருந்த நிலையில், பள்ளிக்கு செல்லும் மாணவ,மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனை தொடர்ந்து தனது சொந்த செலவில் சாலை அமைப்பதற்கான உரிய அனுமதியை பெற்ற ஜி ஸ்கொயர் நிறுவனம் சுமார் 80 இலட்சம் செலவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகலமாக  சாலை அமைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் திப்பனூரிலிருந்து பன்னி மடை வரும் பொதுமக்கள் குண்டும் குழியுமாக மிகவும் குறுகலான சாலையால் அவதிபட்டு வந்த தங்களுக்கு சாலை அமைத்து கொடுத்த ஜி-ஸ்கொயரின் சமூக பங்களிப்பால்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் கோவை மாவட்ட பொது மேலாளர் பிரகாஷ் கூறுகையில், நான்கரை ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களுக்கு நடுவே 96 வீட்டுமனைகளாக நிலத்தை பிரித்து விற்பனை செய்து வரும் நிலையில் பொதுமக்கள் இந்த வீட்டுமனைகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பன்னிமடையில் இதைவிட அதிகமான விலைக்கு  வீட்டுமனைகள் விற்பனை செய்யபட்ட நிலையில்,  மேற்குபுறவழிச்சாலை, சுத்தமான சூழல் நிலவக்கூடிய இந்த பகுதியில்  மற்ற நிறுவனங்களை  காட்டிலும் குறைந்த விலையில் , ஜி-ஸ்கொயர் விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments