தமிழகம், புதுச்சேரியில் நடமாடும் வேன்கள் மூலம் ஆரம்ப சுகாதார மருத்துவ சேவைகளை வழங்கும் கோடக் லைஃப்...
கோடக் லைஃப நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் 45 சதவீதம் மருத்துவம் மற்றும் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக சுகாதாரத்திற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் கோடக் மஹிந்திரா லைஃப் நிறுவளம் (கோடக் லைஃப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் ? புதிய நடமாடும் மருத்துவ வேன்களை அறிமுகம் செய்துள்ளது இதன் மூலம் இந்தப் பகுதியில் மொத்த வேன்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மக்களுக்கான கான ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சியை கோடக் லைஃப் மேற்கொண்டு வருகிறது இதற்கான துவக்க விழா இன்று கோவையில் நடைபெற்றது கொடியசைத்து துவக்கப்பட்ட இந்த நடமாடும் மருத்துவ வேன்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து ஆரம்ப மருத்துவ உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்க உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், கோடக் லைஃப், வோக்கார்ட் அறக்கட்டளையுடன் இணைந்து கோவையில் இரண்டு நடமாடும் மருத்துவ வேன்களையும், ராமநாதபுரம், நாகப்பட்டினம் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு வேன்களையும் நிறுத்த உள்ளது இந்த வேன்கள் தொலைதூர மற்றும் சிறு நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கு வசிக்கும் மக்களின் வீட்டு வாசலுக்கே சென்று இலவச ஆரம்ப சுகாதார பரிசோதனைகள் நோயறிதல் சேவைகள் மற்றும் அடிப்படை சுகாதார சிகிச்சைகளை வழங்க உள்ளன இதற்கான செயல்பாட்டு செலவுகள் மற்றும் மருத்துவப் பொருட் அனைத்தையும் கோடக் லைஃப் வழங்குகிறது. அத்துடன் இதில் பணியாற்றும் குழுவினருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும் வழங்குகிறது. இது குறித்து கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேஷ் பாலசுப்பிரமணியன் கூறுகையில், மக்களுக்கு தரமான சுகாதார பராமரிப்பு சேவை என்பது ஒரு அடிப்படை உரிமை என்று நாங்கள் கருதுகிறோம் எங்கள் நடமாடும் மருத்துவ வேன் மூலம், பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் நேரடியாக சென்று அவர்களின் உடல்நலம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறந்த சிகிச்சைகளை அளித்து ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குதில் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில், கோடக் லைஃப் அதன் சமூக மேம்பாட்டு திட்டத்தில் 45 சதவீதத்துக்கும் அதிகமான தொகையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த தொகை குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வியில் அதிக அளவில் பயன்படுத்தப்பட உள்ளது அதில் நடமாடும் வேன்கள் மூலம் ஆரம்ப சுகாதார சேவையை வழங்குவதையும், கண் தானம் விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் முகாம்கள் மூலம் கண் பராமரிப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள 23 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித் தொகையையும் கோடக் லைஃப் வழங்குகிறது.
-சீனி, போத்தனூர்.
Comments