தென்னிந்திய ஜோதிடர் நலச்சங்க முப்பெரும் விழா! - ஜோதிடர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர கோரிக்கை!!
சங்கத்தின் சபை தலைவர் சமீல் முருகன் தலைமையில் இதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகர் லயன் செந்தில் குமார் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ப்ரஸன்ன மணிகண்டன் கலந்து கொண்டு பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது பேசிய அவர்,சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து அவர்,ஜோதிட கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல ஜோதிட துறை தொடர்பான பாடத்திட்டத்திட்டத்திற்கான கல்லூரியை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
விழாவில்,தென்னிந்திய ஜோதிடர் சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாதுரை, கௌரவ தலைவர் காளிதாஸ்,செயலாளர் சுரேஷ்,பொருளாளர் கவிராஜ் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் ஆலோசணை கூட்டம்,சங்க கொடி அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் என முப்பெரும் விழாவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஜோதிடர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சித்தர் வழி வந்த கால நேரத்தை நிர்ணயிக்கக்கூடிய ஜோதிடர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் ஊடக பிரிவு ஆனந்தன், சங்ககிரி செந்தில்குமார்,தஞ்சை முருகன்,அத்தானி ஆனந்தன்,மங்களபுரம் செந்தில்குமார்,ஒருவந்தூர் சிவக்குமார்,கணேசன்,பார்த்திபன் ,சாய் செந்தில், ஸ்ரீ சாய் சரவணா,திங்களூர் சிவக்குமார்,தனபால், தங்கதுரை, கிருஷ்ணன் பெரியசாமி,கோவை சின்னதுரை, ஆனந்தன் உட்பட மாநில,மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
...
Comments