விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை திருவிழா போட்டிகள் நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரேடீசன் ப்ளூ எக்ஸியூட்டிவ் செப் பால் நவீன் சந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றி மாணவர்கள் அசத்தினர். மேலும் சிலம்பத்தில் தீ பற்ற வைத்து சுற்றி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தினர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர், விநாயகர் வேடமிட்டு மாணவர் மற்றும் மாணவிகள் முன்னிலையில் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் 15 குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு குழுவிலும் 5 மாணவ, மாணவிகள் வீதம் கலந்துக்கொண்டு விதவிதமான கொழுக்கட்டை செய்யும் போட்டிகள் நடைபெற்றது.
அதில் கார கொழுக்கட்டை, ராகி கொழுக்கட்டை, பிளவர் கிங் கொழுக்கட்டை, கொழுக்கட்டை வெள்ளம் பாவு, இனிப்பி கொழுக்கட்டை, உருளைகிழங்கு லாலிபாப்பு கொழுக்கட்டை, ஜவ்வரிசி தேங்காய் பால் கொழுக்கட்டை, பாசிபருப்பு சாக்லேட் கொழுக்கட்டை, மசாலா கொழுக்கட்டை, கவுனி அரிசி மசாலா கொழுக்கட்டை, அரிசி மாவு கொழுக்கட்டை, ஆப்பிள் கொழுக்கட்டை, கேரட் கொழுக்கட்டை, பழாபழம் கொழுக்கட்டை உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட விதவிதமான கொழுக்கட்டைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து போட்டிகள் முடிந்துவுடன் கண்காட்சியில் மாணவர்கள் கொழுக்கட்டைகளை வைத்தனர். அதனை சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரியின் சி.இ.ஒ, கல்லூரி செப் கேசவன் ஆகியோர் ஆய்வு செய்து சிறந்த முறையில் கொழுக்கட்டைகளை செய்தவர்களை தேர்ந்தெடுத்தனர். அதில் ராஜ்குமார், முகமது அனீஸ், முகில், ஆதித்யா குமார் மற்றும் ஸ்ரீசக்திவேலன் அடங்கிய டீம் முதல் இடத்தையும், கார்த்திகேயன், அலெக்ஸ் பாண்டி, தினேஷ், தமிழ் மற்றும் சதீஷ் அடங்கிய டீம் 2வது இடத்தையும், மிதுனேஷ், மாஷான்குமார், லக்ஷ்மணன், திலீப் மற்றும் பார்த்தசாரதி டீம் 3வது இடத்தையும் பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ், மெடல்கள் வழங்கப்பட்டன. மேலும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாத்தினர் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments