கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்!!

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் கோவில்பட்டியில் நடைபெற்ற இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் மண்டல மாநாட்டில் தீர்மானம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் மண்டல மாநாடு, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் மாநில செயலாளர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி, மாவட்ட தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தார். 

மாவட்ட பொதுச்செயலாளர் செல்லத்துரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுந்தர்ராஜ் நாயக்கர், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர், ஐ.என்.டி.யூ.சி பொதுச்செயலாளர் ராஜசேகரன், வர்த்தக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.எம்.டி.எஸ்.ராஜா, சேவாதள மாவட்ட நிர்வாகி சக்தி விநாயகர், குப்பனாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் உடையார்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தார். 

கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாவட்ட பொறுப்பாளருமான அருண்பாண்டியன் வரவேற்புரையாற்றினார். இதில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் மாநில தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவருமான வாழப்பாடி ராமசுகந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

கூட்டத்தில் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்ற மத்திய அரசு பதவி விலக வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வலியுறுத்தி மாவட்டம் தோறும் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் சார்பில் போராட்டம் நடத்த தீர்மனிக்கப்பட்டுள்ளது. .உலக தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ. வில் உலகத் தொழிலாளர்கள் நலனுக்காக பல முடிவுகளை எடுக்க காரணமாக இருந்தவர் சர்வதேச தோட்ட தொழிலாளார் சம்மேளனம் துணைத்தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் ஐ.எல்.ஓ வில் பணி ஆற்றிய மகத்தான தலைவர் மற்றும் அணி சேரா நாடுகள் எண்ணிக்கையை உயர்த்த அன்னை இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் வழிகாட்டுதல் படி மிக கடுமையாக உழைத்தார்கள் அதற்காக அணி சேரா நாடுகள் கூட்டமைப்பில் நாடு அல்லாதா உறுப்பினராக இருந்த இருவர் வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் யாசர் அராபத் ஆகவே மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களுக்கு திருவுருவசிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு கேட்டுக் கொள்கிறோம். கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களின் ஓய்வு ஊதியம் ரூ 3000 ஆக வழங்க வேண்டும். 

அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகள் ஆண் பெண் முறையே திருமண உதவித்தொகை ரூ 3000,5000, என வழங்கிவருவதை தலா ரூ 20000 என உயர்திடவும். ITI,  பாலிடெக்னிக் பயில வழங்கி வரும் ரூ 1000த்தை 3000 மாக உயர்த்தி வழங்கிட வேண்டியும். கட்டுமான பொருட்களான கம்பி, மணல், ஜல்லி சிமென்ட் ஆகியவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டியும். மூன்பு போல டீனுழு அலுவலகம் மூலம் மானிய விலையில் சிமென்ட் மூடைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து உதவி தொகைகளும் மாதம் ரூ 3000 ஆக உயர்தி வழங்க வேண்டியும். கடந்த ஆண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறறோம். கடம்பூர் - குருமலை சலை மிக மிக மோசமாக உள்ளது. உடனடியாக புதிய சாலை போட வேண்டும்.கயத்தாறு முதல் எப்போதுவெண்றான் சாலை புதிய சாலை அமைக்க வேண்டும். கோவில்பட்டியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்தாலும் அது தாமதபடுத்தப்பட்டு வருகிறது. உடனடியாக கோவில்பட்டியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் பொன்னுச்சாமிபாண்டியன், பிரேம்குமார், சுப்புராயலு, ஐ.என்.டி.யூ.சி.ராஜசேகர், மாநில பேச்சாளர் தீப்பொறி ராமர், துரைராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் கந்தசாமி நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Comments