வால்பாறை பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக ரக்ஷா பந்தன் விழா...

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை பிரம்மா குமாரிகள் அமைப்பின் ராஜயோக தியான நிலையம் சார்பில் ரக்ஷா பந்தன் என்னும் புனித விழா ஆனந்தமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை வால்பாறை பொறுப்பு சகோதரி கற்பகம் மற்றும் பிரம்மா குமாரர் சந்தோஷ் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். திருப்பூர் மண்டல சகோதரி, ராஜயோகினி ரேணுகா ஜி மற்றும் பொள்ளாச்சி பொறுப்பு சகோதரி பிரவீனா கலந்து கொண்டு, இறைவனின் பாதுகாப்பையும் சகோதரத்துவத்தையும் குறிக்கும் புனிதமான ராக்கி கயிறு அணிவித்து, வரதான அட்டைகளையும் இனிப்புகளையும் வழங்கினர்.

விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வால்பாறை பரமசிவம் அவர்கள் உரையாற்றியபோது: “மனிதனாக பிறப்பது மிக முக்கியம். பிறப்பு, இறப்பு யாருக்கும் உறுதியில்லை. பிறர் என்ன செய்தார்கள் என்பதைக் கவலைப்படாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நாமென்ன செய்தோம் என்பதை நினைக்க வேண்டும். வாழ்க்கையில் கோபமும் சந்தேகமும் இல்லாமல் இருந்தால் அமைதியான பாதையில் செல்வோம். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இந்த அமைதியான இடத்தில் கிடைக்கும். அனைவரும் இங்கே வந்து மனமும் எண்ணங்களும் அமைதியாக நிலைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை ஆற்றினர். இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று அனைவரையும் உற்சாகப்படுத்தின. பொதுமக்கள், சிறார்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மன அமைதிக்கான தியானத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

-M.சுரேஷ்குமார்.

Comments