வி.ஜி.எம் அறக்கட்டளை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியிடபட்டது!!

கோவை: சட்டத் துறை, அரசியல், கூட்டுறவு இயக்கங்கள் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சேலத்தைச் சேர்ந்த மாமனிதரும், மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் நெருங்கிய சகாவுமான 'சுதந்திர செம்மல்', 'பார்-அட்-லா' ஆதிநாராயண செட்டியாரின் வாழ்க்கை வரலாறு நூல்  வி.ஜி.எம் அறக்கட்டளை மற்றும் கோயம்புத்தூர் கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த புத்தகத்தை, கோயம்புத்தூர் பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர்; ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். கிருஷ்ணன், மற்றும் ரூட்ஸ் குழும இயக்குநர் கவிதாசன் ஆகியோர் கோயம்புத்தூர் போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் வெளியிட்டனர்.

வி.ஜி.எம். மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் முன்னிலையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

'சுதந்திர செம்மல்' பார்ட்-அட்-லா டி. ஆதிநாராயண செட்டியார், டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத்தின் கொள்ளுத்தாத்தா ஆவார். அவரது 150-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இந்த வாழ்க்கை வரலாறு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மாணிக்கம், ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கெங்குசாமி, செல்லா ராகவேந்திரன், விஜய் கிருஷ்ணா, செல்வகுமார் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments