தெற்கு மாவட்டம் சார்பாக கேப்டன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் ஆனைமலை பேரூர் கழகத்தின் சார்பாக பேரூர் கழகச் செயலாளர் குணா தலைமையில் கேப்டன் படத்திற்கு மாலை அணிவித்து 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் கோட்டூர் பேரூராட்சி சார்பாக பேரூராட்சி செயலாளர் அபுதாஹிர் அவர்களின் முன்னிலையில் கேப்டன் அவர்களை வணங்கி ,200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் ஆனைமலை கிழக்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. ராம்தாஸ் அவர்களின் தலைமையில் கேப்டனின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பேரூர் கழகச் செயலாளர் பெர்னாட் அவர்களின் தலைமையில் பொன்னைய கவுண்டனூர் குறிஞ்சேரி பிரிவில் கேப்டன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வீராச்சாமி அன்னதானம் வழங்கினார்கள்.
மேலும் பொள்ளாச்சி கிழக்கு நகரம் சார்பாக, நகரச் செயலாளர் ஹக்கீம் தலைமையில் பொள்ளாச்சி அண்ணா சிலை ரவுண்டானா அருகில் கேப்டன் அவர்களுக்கு மரியாதை செலுத்தி சுமார் 200 பேருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் ஆழியாரில் நிஷாந்த், தயானந்த் ஆகியோர் தலைமையில் கேப்டன் அவர்களை வணங்கி 200 பேருக்கு அன்னதானமும், அரசு பள்ளி குழந்தைகளுக்கு 300 பேருக்கு இனிப்பும் வழங்கப்பட்டது . இதில் ஜோதிபாஸ் கலந்து கொண்டார்.
மேலும் சூலூர் வடக்கு ஒன்றியம் சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் இனிப்பு வழங்கப்பட்டது .
அதைப்போல் மற்ற பகுதிகளிலும் கேப்டன் அவர்களை வணங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி , அன்னதானமும் வழங்கினார்கள்.
இதில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வனிதா துரை, மாவட்ட பொருளாளர் வாழை இலை முருகேசன், பொதுக்குழு உறுப்பினர். மணிகண்டன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் விஸ்வநாதன், ஜஹாங்கீர், மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் மகேந்திரன், மற்றும் ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் சின்ன கருப்புசாமி, ஆனைமலை பேரூர் கழகச் செயலாளர் குணா, கோட்டூர் பேரூர் கழகச் செயலாளர் அபுதாஹிர், ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராம்தாஸ், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பேரூர் கழகச் செயலாளர் பெர்னாட், உடைய குளம் பேரூராட்சி செயலாளர் சிவகுமார், பொள்ளாச்சி கிழக்கு நகர செயலாளர் ஹக்கீம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ராசு, கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி, மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments