'உலக உடல் உறுப்பு தான தினம்'– உயிர் காக்கும் கல்லீரல் தான கொடையாளர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது!!

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் “உலக உடல் உறுப்பு தான தினம்” – உயிர் காக்கும் கல்லீரல் தான கொடையாளர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் “Celebrating Gift of Life: Honouring Our Live Liver Donors”  என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், மூளை சாவு அடைந்து அவர்களது உறுப்புகளை  தானமாக வழங்குவது குறைவாக இருப்பதால், கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகள் பெரும்பாலும் “உயிருடன் கல்லீரல் தானம்” செய்வதற்கே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்பதைக் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கல்லீரல் செயலிழப்பு காரணமாக இறுதி கட்டம் ஆபத்தில் இருந்த நோயாளிகளை காப்பாற்ற, அவர்களின் நெருங்கிய உறவினர்கள் தங்கள் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கிய தைரியத்தை ராமகிருஷ்ணா மருத்துவமனை கௌரவித்தது. இதில்

திரு. ஆர். சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மருத்துவர் வி. பிரேம் சந்தர், மூத்த ஆலோசகர் – கல்லீரல் மாற்று மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் , வரவேற்புரையை வழங்கினார். 

இந்த நிகழ்வில் மருத்துவமனையின் தலைமை நிர்வாகம் மற்றும் மருத்துவமனை  குழுவின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் தலைமை செயல் அதிகாரி, தலைமை  நிர்வாக     அதிகாரி, மருத்துவ இயக்குநர், மருத்துவ கண்காணிப்பாளர் , மூத்த ஆலோசகர்கள், செவிலியர் பிரிவு தலைவர்கள், செவிலியர் குழுவினர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments