கோவையில் பாரம்பரியம், கலை, ஆன்மிகம் மூன்றையும் இணைத்து, கைவினைச் சிற்பங்களுக்கான சிலை எனும் விற்பனை மையம் துவக்கம்!!

உலக அளவில் சிற்ப கலை வடிவமைப்பில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள தமிழகத்தில் தத்ரூப சிலைகளை நவீன வடிவில் கண்கவரும் விதத்தில் உருவாக்கி சிலைகள் விற்பனையில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் சிலை விற்பனை மையம் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தனது புதிய கிளையை துவங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் துவங்கி உள்ள சிலை விற்பனை மையத்தின் துவக்க விழாவில்,கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்களான பிரிக்கால் நிறுவனத்தின்   தலைவரும் 'சிறுதுளி' இணை நிறுவுநருமான  வனிதா மோகன், கே.ஜி. மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், குமரகுரு கல்வி நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ணராஜ வானவராயர் மற்றும் தலைவர் சங்கர் வாணவராயர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணன், நேச்சுரல்ஸ் பியூட்டி சலூன் நிறுவனர்  குமாரவேல், சி.பி.சி.நிறுவனத்தின்  மேலாண்மை இயக்குநர் ஆதித்யா பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய நாட்டின் பாரம்பரியம், கலை, ஆன்மிகம் மூன்றையும் இணைத்து,தத்ரூபமாக  கைவினைச் சிற்பங்களாக பல்வேறு வடிவிலான சிலைகள் காண்பவர் கண்களை கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சிலை விற்பனை நிறுவனத்தின்,நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி,அருண் டைட்டன்,இணை நிறுவனர்கள்   ராகுல்கிஷன்  தினேஷ் அருணாச்சலம்,சவும்யா,வர்த்தக மேலாளர் விஜய் ஆனந்த், ஆகியோர் கூறுகையில்,பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஆர்வத்தையும், சமகாலக் கலைத்திறனையும் ஒருங்கிணைத்து, நினைவுகளையும் பக்தியையும் வடிவமாக்கி, இல்லங்களை அழகாக  மாற்ற நினைப்பவர்களுக்கு சிலை விற்பனை மையத்தில் ஏராளமான சிற்பங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.

12 அடி உயரம் கொண்ட சிலைகள் துவங்கி, திருவள்ளுவர், நடராஜப் பெருமான் சுவாமி விவேகானந்தர், முருகப் பெருமான், பெருமாள் ஆகியோரின் சிற்பங்கள், துல்லியமான வடிவமைப்பு,  உயிரோட்டமான தோற்றத்துடன் காட்சியளிப்பது காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என தெரிவித்தனர். 

துவக்க விழாவை முன்னிட்டு சி்லை நிறுவனம் சார்பாக' கோயம்புத்தூரை வடிவமைத்தவர்களுக்கு ஒரு சமர்ப்பணம்' என்ற சிறப்பு காணொளி  வெளியிடப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments