பணித்திறன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பிடித்த தூத்துக்குடி மோப்பநாய் படை!!
மாநில அளவில் நடைபெற்ற காவல்துறையினருக்கான பணித்திறன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பிடித்த தூத்துக்குடி மோப்பநாய் படை பிரிவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாநில அளவிலான பணித்திறன் போட்டி சென்னை ஆவடி பட்டாலியனில் வைத்து நடைபெற்றது. இதில் கடந்த 28.07.2025 முதல் 02.08.2025 ஆகிய நாட்களில் காவல் மோப்பநாய் படை பிரிவு (Dog Squad), வெடிகுண்டு கண்டெடுத்தல் மற்றும் செயல் இழப்பு பிரிவு (BDDS), சிசிடிஎன்எஸ் பிரிவு (CCTNS) ஆகியவற்றில் நடைபெற்ற பணித்திறன் போட்டியில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் படைப்பிரிவு காவல்துறையினர் மற்றும் துப்பறியும் மோப்பநாய் சூனோ, கிரைம் ட்ராக்கர் (Crime Tracker) என்னும் செயல்திறன் போட்டியில் நுணுக்கமாக செயல்பட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை பெற்றது.
மேற்படி வெற்றி பெற்ற மோப்பநாய் படை பிரிவு மோப்பநாய் ஜூனோவை பார்வையிட்டும் அதற்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினரை இன்று (18.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணிபாலா.
Comments